Home /News /entertainment /

இதைப்பத்தி மட்டும் கவலைப்படுங்க... பெற்றோருக்கு பிக் பாஸ் அர்ச்சனாவின் அட்வைஸ்!

இதைப்பத்தி மட்டும் கவலைப்படுங்க... பெற்றோருக்கு பிக் பாஸ் அர்ச்சனாவின் அட்வைஸ்!

பிக் பாஸ் அர்ச்சனா

பிக் பாஸ் அர்ச்சனா

Bigg Boss Archana | தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருப்பவர் விஜே அர்ச்சனா. பல ஷோக்களை தொகுத்து வழங்கி சிறந்த வீடியோ ஆங்கராக மக்கள் மனதில் தனி இடம் பிடித்து இருப்பவர் விஜே மற்றும் நடிகையுமான அர்ச்சனா. 

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருப்பவர் விஜே அர்ச்சனா. பல ஷோக்களை தொகுத்து வழங்கி சிறந்த வீடியோ ஆங்கராக மக்கள் மனதில் தனி இடம் பிடித்து இருப்பவர் விஜே மற்றும் நடிகையுமான அர்ச்சனா.

    தமிழ் சேனல்களில் பல ஆண்டுகளாக முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வந்த அர்ச்சனா, சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் வந்து சின்னத்திரையில் தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார். தவிர ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். இது எல்லாவற்றையும் தாண்டி சின்னத்திரை பிரமாண்ட ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 4-ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் விஜே அர்ச்சனா.

    வைல்ட் கார்ட் என்ட்ரியாக 11-ம் நாளில் நுழைந்த அர்ச்சனா 77-ம் நாளில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை பிக்பாஸ் ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம். ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாகவே இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் இவர் ஆக்ட்டிவாக இருந்தாலும், பிக்பாஸில் பங்கேற்ற பிறகு இவரை சோஷியல் மீடியாக்களில் ஃபாலோ செய்பவர்கள் எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருந்து வருகிறது.

    இதனால் தன் ஃபாலோயர்ஸ்களை திருப்திபடுத்தும் விதமாக தன்னுடைய பொதுவாக வேலை மற்றும் அன்றாட வாழ்க்கையை பற்றி அப்டேட்ஸ்களை அப்லோட் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். பல மாதங்களுக்கு பிறகு கடந்த சில வாரங்களாக மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திரும்பி இருக்கும் நிலையில், இறுதி தேர்வை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

    என்னால முடியல.. திடீரென்று வீட்டில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்!


     

    இந்த நிலையில் தேர்வு பயம் குறித்தும், தேர்வில் வெற்றி பெறுவது குறித்தும் இன்ஸ்டாவில் கூறி இருக்கிறார் அர்ச்சனா. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடக்க உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தேர்வுகளை பற்றிய கவலையில் உள்ளார்கள். இதனை உணர்ந்துள்ள அர்ச்சனா இன்ஸ்டாவில் தனது மகள் ஸாராவின் போட்டோக்களுடன் ஒரு ரீலை ஷேர் செய்துள்ளார்.

    குறிப்பிட்ட இன்ஸ்டா போஸ்ட்டில் ஒரு மெசேஜை ஷேர் செய்துள்ள அர்ச்சனா, அதில் தேர்வு பதற்றம் அல்லது மனஅழுத்தத்தை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுவது எளிதானது அல்ல!! ஆனால் என் மகள் அவரது ஸ்டைலில் இதை எதிர்கொள்கிறார். இதனால் ஒரு அம்மாவாக பெருமை கொள்கிறேன். பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் தங்கள் தேர்வுகளுக்கு தயாராவதற்காக எடுக்கும் முயற்சிகளைப் பற்றி மட்டுமே கவலைப்படுங்கள்.. முடிவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம்!! கடின உழைப்பு எப்போதும் பலன் தரும்.. இன்று இல்லை என்றால்.. நிச்சயம் நாளை !! என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தை அர்ச்சனாவின் பல ஃபாலோயர்ஸ் ஆமோதித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Archana biggboss, Entertainment

    அடுத்த செய்தி