ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Bigg Boss ஜூலிக்கு 'ஐ லவ் யூ' சொன்ன சக போட்டியாளர்.. பதிலுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா.?

Bigg Boss ஜூலிக்கு 'ஐ லவ் யூ' சொன்ன சக போட்டியாளர்.. பதிலுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா.?

Julie

Julie

Bigg boss Julie | பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் கலந்துகொள்ள "மீண்டும்" தேர்வு செய்யப்பட்ட மரியா ஜூலியானா முதல் சீசனில் தான் இழந்த பெயரை இந்த ஷோ வழியாக மீட்டெடுப்பேன் என்று உறுதிபூண்டார், அதை கிட்டத்தட்ட செய்துகாட்டினார் என்றே கூறலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஜூலி என்று நன்கு அறியப்பட்ட மரியா ஜூலியானா, 2017ல் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு 'Non-Celebrity' போட்டியாளராக, அதாவது முன்பின் அறியப்படாத, பெரிய அளவில் பிரபலம் இல்லாத ஒரு போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தன்னை ஒரு வீர தமிழச்சியாக பிரதிபலித்ததன் விளைவாகவே ஜூலிக்கு பிக் பாஸ் போட்டியில் பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் "ஓவர் நைட்ல ஃபேமஸ் ஆனா.. இன்னொரு ஓவர் நைட்ல டேமேஜ் ஆகிடுவாங்க" என்கிற வாசகத்திற்கு ஏற்றபடி ஆரவாரத்தோடு அறிமுகம் செய்யப்பட்ட ஜூலி, பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக மாறினார்!

ஒரு நிகழ்ச்சிக்காக, சுற்றி உள்ள கேமராவிற்காக தன் இயல்பை மாற்றிக்கொள்ளாமல் நிஜ வாழ்வில் தான் எப்படியோ, அதேபோல பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் நடந்துக்கொண்டதன் விளைவாக ஜூலிக்கு பாசிட்டிவ் இமேஜை விட நெகட்டிவ் இமேஜே அதிகம் உருவானது. ஆகையால் தான், பிக் பாஸ் சீசன் 1 வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் கூட ஜூலிக்கு பெரிய வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத ஜூலி தொடர்ச்சியாக போட்டோ ஷூட்களை நடத்தி, சமூக ஊடங்களில் பறக்கவிட்டு கொண்டே இருந்தார். இதன் விளைவாக அவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்திக்கொண்ட ஜூலிக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது.

இதற்கிடையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியாக அறிவிக்கப்பட்ட பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் கலந்துகொள்ள "மீண்டும்" தேர்வு செய்யப்பட்டார் மரியா ஜூலியானா. முதல் சீசனில் தான் இழந்த பெயரை இந்த ஷோ வழியாக மீட்டெடுப்பேன் என்று உறுதிபூண்ட ஜூலி, அதை கிட்டத்தட்ட செய்துகாட்டினார் என்றே கூறலாம்.

Also Read : யாரையும் நம்ப வேண்டாம் - நடிகை ஷாலு ஷம்மு எச்சரிக்கை பதிவு

பிக் பாஸ் அல்டிமேட் ஷோவின் கடைசி 5 போட்டியாளர்களில் ஒருவராக நீடித்தார் ஜூலி. வீட்டை விட்டு வெளியேறும் போது ஹவுஸ்மேட்களிடம் விடைபெற ஜூலிக்கு வாய்ப்பு வழங்கப்படாததால், அவர் வீட்டில் இருந்த இறுதி தருணங்களின் வீடியோவை சமூக ஊடகங்களில் ஷேர் செய்யும் அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தார் ஜூலி!


இந்நிலையில் மற்றொரு போட்டியாளரான அபிராபி, ஜுலியுடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு செல்பியை தன் இன்ஸ்டாகிராம் பேஜில் ஷேர் செய்துள்ளார். குறிப்பிட்ட போஸ்ட்டின் கேப்ஷனில், பிக்பாஸ் வீட்டில் என்னுடைய எனர்ஜி பூஸ்டர் ஜூலி தான் என்றும், லவ் யூ பட்டூஸ் என்றும் குறிப்பிட்டுள்ளார். அபிராமியின் இந்த போஸ்ட்டிற்கு பதில் அளிக்கும் வண்ணம் "லவ் யூ டூ கண்ணம்மா" என்று ஜூலி கமெண்ட் செய்து உள்ளார். இந்த போஸ்ட்டிற்கு பிக் பாஸ் அல்டிமேட் மற்றும் ஜூலியின் ரசிகர்கள் லைக்ஸ்களை வாரிக்கொடுத்த வண்ணம் உள்ளனர்.

Published by:Selvi M
First published:

Tags: Bigg boss Julie, Bigg Boss Tamil