• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஐக்கியுடன் ரொமான்ஸ் செய்யும் ராஜு - ஹவுஸ் மேட்ஸால் கடுப்பான நமீதா!

ஐக்கியுடன் ரொமான்ஸ் செய்யும் ராஜு - ஹவுஸ் மேட்ஸால் கடுப்பான நமீதா!

ஹவுஸ் மேட்ஸால் கடுப்பான நமீதா

ஹவுஸ் மேட்ஸால் கடுப்பான நமீதா

இந்த சீசனில் பிரியங்கா மற்றும் ராஜு நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்கின்றனர். அன்சீன் வீடியோவாக வெளியாகி இருக்கும் மற்றொரு ப்ரோமோவில், ராஜு, ஐக்கியுடன் டூயட் ஆடுகிறார்.

  • Share this:
விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த சீசனில் முதல் லக்ஸுரி டாஸ்காக "ஒரு கத சொல்லட்டுமா?" என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இசைவாணி, சின்ன பொண்ணு, ஸ்ருதி, இமான் அண்ணாச்சி பேசினார்கள். இன்று யார் பேசுவார்கள் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.


இதனிடையே வழக்கம் போல வீட்டு வேலை செய்வதில் பிரச்சனைகள் எழுவது இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. அதில் நமீதா காபி கப்புகளை சிங்கில் அனைவரும் போடுங்கள் என கோபமாக கூறுகிறார். அப்போது பிரியங்கா, அபிஷேக்கை குறை கூற அவர் குறும்படம் போடுங்கள் பிக் பாஸ் நான் தான் கப்புகளை எடுத்து சிங்கில் வைத்தேன் என கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

Also read... கடும் அப்செட்டில் இருக்கும் பிக்பாஸ் 5 போட்டியாளரின் முன்னாள் மனைவி - என்ன காரணம்?



 




View this post on Instagram





 

A post shared by Vijay Music (@vijaymusicoffl)






இந்த சீசனில் பிரியங்கா மற்றும் ராஜு நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்கின்றனர். அன்சீன் வீடியோவாக வெளியாகி இருக்கும் மற்றொரு ப்ரோமோவில், ராஜு, ஐக்கியுடன் டூயட் ஆடுகிறார். அதில் எதிர்பாராதவிதமாக இருவரும் கீழே இருக்கும் செருப்பை எடுக்க அப்போது "செருப்பை விட முக்கியமான பொருள் நீ இருக்கும் போது என்னால் செருப்பு குறித்து சிந்திக்க முடியவில்லை" என ராஜு கூற, அதற்கு இவ்ளோ பொறுப்பு இருப்பவர் பருப்பு மாதிரி இவ்ளோ நாள் எங்கிருந்தீர்கள் என கேட்கிறார். அதற்கு ராஜு உன்னை எப்படி நான் தனியாக விட்டு செல்வேன் என கூற, ஐக்கி ஒரு கால் கூட பன்னவிலையே? என கேட்கிறார். அதற்கு ராஜு, "பேலன்ஸ் இல்ல மா" என சிரித்து கொண்டே கூறுகிறார். ரொமான்ஸ் செய்வதாக காமெடியாக பேசுவதை பார்த்து சக ஹவுஸ் மேட்ஸ் சிரித்து கொண்டிருக்கின்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.

முன்னதாக வெளியான இரண்டாவது ப்ரோமோவில், பாவ்னி இரவில் அழுது கொண்டிருக்கும் காட்சிகள் உள்ளது. மதுமிதாவிடம் பேசி கொண்டிருக்கும் பாவ்னி, என் கணவர் இறந்து 5 வருடங்கள் ஆகிறது, நான் இன்னும் அந்த நினைவுகளுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு பெரிய ஹீரோயின் ஆகவேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லை, நான் எனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கேன் அவ்வளவு தான் என அழுது கொண்டே கூற அவரை மதுமிதா சமாதானப்படுத்துகிறார். இதனால் இன்று அவர் தனது வாழ்க்கை குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: