கோழிகளும், நரிகளும்.. பிக்பாஸ் வீட்டில் உடைந்த குரூப்பிஸம்.. இந்த வாரத் தலைவர் போட்டிக்குத் தேர்வானவர்கள் யார்?

கோழிகளும், நரிகளும்.. பிக்பாஸ் வீட்டில் உடைந்த குரூப்பிஸம்.. இந்த வாரத் தலைவர் போட்டிக்குத் தேர்வானவர்கள் யார்?

பிக் பாஸ் 4 தமிழ்

அர்ச்சனா, ரியோ, சோம், கேபி ஆகியோர் குழுவாக விளையாடுவதாக கமல் குற்றம்சாட்டிய நிலையில், இந்த வாரம் அவர்கள் தனித்தன்மையுடன் விளையாடினர்.

  • Share this:
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய நிலையில் தற்போது 74 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை சண்டை, வெறுப்பு, கோபம் என சென்ற பிக் பாஸ் வீட்டிலிருந்து இதுவரை ரேகா, சுரேஷ், சனம், வேல்முருகன், சம்யுக்தா, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகிய 7 பேர் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் வீடு கோழிப் பண்ணையாக மாறியது. இதனால் ஹவுஸ்மேட்ஸ் கோழிகளாகவும், நரிகளாகவும் மாறினர். இதில் நரிகளாக இருப்பவர்கள் கோழிகளின் முட்டைகளைத் தொட்டால் அவர்களது பணம் நரிகளுக்குச் சென்றுவிடும். இந்த டாஸ்க்கை சரியாகப் புரிந்துகொள்ளாமல் ஏராளமான குழப்பங்கள் ஏற்பட்டன.

நேற்றைய நிகழ்ச்சியில் அர்ச்சனா சற்று வித்தியாசமாக முட்டையின் மீதே படுத்துவிட்டார். அப்போது அர்ச்சனா முட்டையைத் தொட ஆஜித், ரியோ, சோம் மூன்று பேரும் போட்டிபோட்டனர். அதில் முதல் ஆளாக ரியோ முட்டையைத் தொட்டுவிட்டார். ஆனால் அவர் அருகில் ஆஜித் இருந்ததால் அது செல்லாது என அர்ச்சனா அதை ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பின் சோம் அதைத் தொட்டுவிட்டார். அவர் தொட்ட பின்னர் முட்டை உடைந்துவிட்டது, இதனால் சோம் தான் முட்டை உடைத்தது என அர்ச்சனா குற்றம்சாட்ட, சோம் அதை மறுத்தார். இதைப் பற்றி அர்ச்சனா - சோம் இடையே வாக்குவாதம் நடந்தது.

Also read: நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் பலத்த பாதுகாப்புடன் கோட்டாட்சியர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்..

அப்போது அர்ச்சனாவின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்த உடைந்த முட்டையைத் தூக்கியெறிந்தார் சோம். அந்த முட்டையை தன் புகைப்படத்துடன் எப்படி தூக்கிப் போடலாம் என ஆதங்கத்துடன் அர்ச்சனா சண்டை போட்டார். ஒருவழியாக இந்த டாஸ்க் நிறைவடைந்த நிலையில், இதில் பாலாஜி தான் அதிக பணத்தைக் கைப்பற்றியிருந்தார். மேலும் ரியோவிடம் பணமே இல்லை. இதனைத் தொடர்ந்து, அனிதாவை கன்பெக்ஷன் ரூமிற்கு அழைத்து பிக் பாஸ் பேசினார். இப்போது உங்கள் கணவர் அருகில் இருந்தால் என்ன சொல்வீர்கள் என பிக் பாஸ் கேட்க, ”முதலில் மன்னிப்புக் கேட்பேன். அழக்கூடாது, சும்மா கோபப்படக் கூடாது என்றுதான் சொல்லி அனுப்பினார். ஆனால் நான் அதைத்தான் அதிகம் செய்திருக்கிறேன். அதனால் அவர் காலிலேயே நான் விழுந்துவிடுவேன்” என்றார்.

மேலும் நீங்கள் அப்பா செல்லமா அல்லது அம்மா செல்லமா என்றார். அதற்கு அனிதா, ”இருவரது செல்லமும் இல்லை, ஆனால் அன்பு, பாசம் அதிகம் உள்ளது” என்றார். பின்னர் அனிதாவை கன்னுக்குட்டி என அழைத்ததால் அவர் சிரித்தவாறு வெளியே சென்றார். அதற்குப் பிறகு, அர்ச்சனா கன்பெக்ஷன் ரூமிற்கு வந்தார். அப்போது பிக் பாஸ் அர்ச்சனாவின் கண்களை மூடுமாறு சொல்லி, நீங்கள் இப்போது உங்கள் வீட்டிற்குச் செல்கிறீர்கள், உங்கள் வீட்டின் கதவின் முன்னே நிற்கிறீர்கள், உங்கள் மகள் கதவைத் திறக்கிறார் என பிக் பாஸ் ஒவ்வொன்றாகக் கூறி வந்தார்.

அப்போது அர்ச்சனா கதறி அழத் தொடங்கிவிட்டார். அதன் பின்னர் பிக் பாஸ் வீடு பற்றி கேட்டபோது, "நான் அன்பால் ஜெயிக்கலாம் என நினைத்தேன். ஆனால் இது இல்லாமல் போய்விடுமோ என பயமாக இருக்கிறது. நாளையிலிருந்து ராணுவ வீரரின் மனைவியைப் பார்ப்பீர்கள். நன்றாக விளையாடுவேன்” என்று கூறினார். அதற்கு பிக் பாஸ், ”அப்படியே சிரித்துக் கொண்டே போங்கள் அர்ச்சு, பார்க்க அழகாக இருக்கும்” என்றார். அதன் பின்னர் வெளியே வந்த அர்ச்சனாவிடம் சோம் சமாதானம் பேசிய நிலையில் நேற்றைய நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரமோவில், இந்த வாரம் நடைபெற்ற கோழிப்பண்ணை டாஸ்கில் சிறந்த போட்டியாளர் யார் என முடிவெடுத்து கூறுங்கள் என பிக் பாஸ் கூறுகிறார். முதலில் அர்ச்சனா தான் சிறப்பாக செய்தார் என அனிதா அவரைத் தேர்வு செய்கிறார். சோம், ஆரி, ரியோ உள்ளிட்டவர்கள் பாலாவின் பெயரை நாமினேட் செய்தனர். ஷிவானி சிறப்பாக செய்ததாக பாலாஜி அவரை நாமினேட் செய்தார்.

இறுதியில் சோம் தான் பெஸ்ட் என அர்ச்சனா கூறுகிறார். ”அவர் என் முட்டையை உடைத்து கடுப்பேற்றி இருந்தாலும், நரியாக இருந்தபோது நரியாக இருந்தார், கோழியாக இருந்தபோது கன்றாவியாக இருந்தார்” என கலாய்த்தார். அர்ச்சனா சோம், ரம்யாவைத் தேர்வு செய்தார். இதில் தேர்வாகும் நபர்கள் அடுத்த தலைவர் போட்டிக்குப் போட்டியிடுவார் என்பது குறிப்பிடத்தகக்கது. கடந்த வாரம் அர்ச்சனா, ரியோ, சோம், கேபி ஆகியோர் குழுவாக விளையாடுவதாக கமல் குற்றம்சாட்டிய நிலையில் இந்த வாரம் முழுவதும் அவர்கள் தங்களது தனித்தன்மையுடன் விளையாடியது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: