Bigg Boss 4 Tamil | இறுதிக் கட்டத்தை நெருங்கும் பிக்பாஸ்.. ஜெயிலுக்குச் சென்ற கேப்ரியல்லா, ஷிவானி..

Bigg Boss 4 Tamil | இறுதிக் கட்டத்தை நெருங்கும் பிக்பாஸ்.. ஜெயிலுக்குச் சென்ற கேப்ரியல்லா, ஷிவானி..

கேப்ரியல்லா, ஷிவானி.

இந்த வாரம் முழுவதும் ஈடுபாடு குறைவாக செயல்பட்ட நபர்களாக கேப்ரியல்லாவும் ஷிவானியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை அடைய இன்னும் ஒரு மாதமே உள்ளது. தற்போது 10 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக கோழிப்பண்ணை டாஸ்க் வழங்கப்பட்டிருந்தது. இதனால் ஹவுஸ்மேட்ஸ் கோழிகளாகவும், நரிகளாகவும் மாறினர். இதில் நரிகளாக இருப்பவர்கள் கோழிகளின் முட்டைகளைத் தொட்டால் அவர்களது பணம் நரிகளுக்குச் சென்றுவிடும்.

இந்த டாஸ்க் நேற்று நிறைவடைந்த நிலையில், இந்த வாரம் நடைபெற்ற கோழிப்பண்ணை டாஸ்கில் சிறந்த போட்டியாளர் யார் என தேர்ந்தெடுக்கும் காட்சிகள் இன்றைய முதல் ப்ரமோவில் இருந்தது. இதில் பாலாஜி, ரம்யா, சோம், ஷிவானி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரமோவில் இந்த வாரம் முழுவதும் சுவாரஸ்யம், ஈடுபாடும் குறைவாக செயல்பட்ட இரண்டு நபர்களைத் தேர்வு செய்யுமாறு பிக் பாஸ் அறிவிக்கிறார்.

அதற்கு ஆரி ஷிவானியைத் தேர்வு செய்கிறார். ”அவங்க மேல தன்னம்பிக்கை வைத்து விளையாடியிருக்கலாம் என்று எனக்குத் தோணுது” என்கிறார் ஆரி. அப்போது எழுந்து வந்த ஷிவானி, ”என்னை தேர்ந்தெடுத்ததில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அவர் குற்றம்சாட்டியது எனக்குப் பிடிக்கவில்லை” என்று கூறுகிறார். பின்னர் அர்ச்சனா ஆரியைத் தேர்வு செய்கிறார். இதனைத் தொடர்ந்து ரியோ, பாலாஜி, ரம்யா, சோம் ஆகியோர் கேபிரியல்லாவைத் தேர்வு செய்கின்றனர்.

இதனால் ஷிவானி மற்றும் கேபி ஜெயிலுக்குச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் சுவாரஸ்யமாகச் செய்தவர்கள் லிஸ்டில் தேர்வானவர்கள் இந்த வார தலைவர் போட்டிக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஒரு டாஸ்க் வைக்கப்பட்டு அவர்களில் ஒருவர் வரும் வாரத்தின் தலைவர் ஆவார். மேலும் அவரை அடுத்த வாரம் யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றைய நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: