Home » News » Entertainment » BIGG BOSS 4 TAMIL GABI MOTHER SUPER ADVICE TO GABI TODAY 88TH DAY VIN GHTA

Bigg boss 4 Tamil | அன்பால் நிறைந்த பிக்பாஸ் ஹவுஸ்.. கேப்ரியெல்லாவுக்கு அம்மா கொடுக்கும் சூப்பர் அட்வைஸ்..

கேபி மற்றும் அவரது அம்மா தனியாக பேசுகையில், "நீ க்ரூப்பாக டாஸ்க் சிறப்பாக செய்தாலும் அதில் தனித்தன்மை ஆகவும் கொஞ்சம் போகஸ் பண்ணு' என அம்மா அட்வைஸ் கூறினார்.

Bigg boss 4 Tamil | அன்பால் நிறைந்த பிக்பாஸ் ஹவுஸ்.. கேப்ரியெல்லாவுக்கு அம்மா கொடுக்கும் சூப்பர் அட்வைஸ்..
கேப்ரியெல்லா
  • News18
  • Last Updated: December 31, 2020, 1:35 PM IST
  • Share this:
பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் தற்போது பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்கில் இதுவரை ஷிவானி அம்மா, பாலாஜியின் சகோதரர் வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று ரம்யாவின் அம்மா மற்றும் அவர் தம்பி வருகை தந்தனர். ரம்யாவின் தம்பி அனைவரிடமும் கலகலப்பாக பேசினார். அஜித்திடம் நான் தான் அவரது ஒரிஜினல் தம்பி என கலாய்த்தார். மேலும் சோம் சேகரிடம் என்ன மச்சான் அந்த சாக்லேட்டை சாப்பிட்டு விட்டீர்களா? என கேட்டார். இதனை சற்றும் எதிர்பாராத சோம், அதெல்லாம் ஷோவில் வெளியானதா என்றார். 

ஆரியை தனது தலைவர் என கூறிய ரம்யாவின் தம்பி, கேபியை பிடிக்கும் என கூறினார். ரம்யாவின் அம்மா அவருக்கு அட்வைஸ் கூறுகையில், நீ எது கூறினாலும் நேராக சம்பதந்தப்பட்டவரிடமே கூறிவிடு, மற்றவர்களிடம் அதுகுறித்து பேசாதே என்றார், அதேபோல அவர் சகோதரர் பேசுகையில், நீ இதுவரை நன்றாக தனித்தன்மையுடன் விளையாடினாய் ஒருவேளை இந்த வாரம் நீ வெளியேறும் சூழல் ஏற்பட்ட அதற்கு நீ காரணமில்லை என சுககமாக தெரிவித்தார். 
இதனை தொடர்ந்து ரியோவின் மனைவி ஸ்ருதி காதலே காதலே பாடலுடன் வருகை தந்தார். 90 நாட்களுக்கு மேல் கணவரை பிரிந்து இருந்த நிலையில், ரியோவை பார்த்ததும் அவரது நெற்றியில் முத்தமிட்டு கண்கலங்கியவாறு தனது அன்பை வெளிப்படுத்தினார். பின்னர் நானும் நேஷனல் டெலிவிஷன்ல வந்துட்டேன்னு சொல்லி கலாய்ப்பதும், ரம்யாவை ஒரு எபிசோட்டில் தூக்கியது குறித்தும் ஜாலியாக பேசினார். 

பின்னர் ரியோவின் மகள் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் அடங்கிய வீடியோ பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து ரியோ - ஸ்ருதி தனியாக அமர்ந்து பேசி கொண்டிருந்தனர், அப்போது ஆரம்பத்தில் நல்லா ஜாலியா இருந்துட்டு இருந்த, அப்புறம் ஏன் திடீர்னு ஆஃப் ஆகிட்ட, இப்படி இருக்காத பழையபடி ஃபன் பண்ணு இன்னும் 3 வாரம் தான் நல்லா எல்லாருடனும் ஹேப்பியா விளையாடிட்டு வா, ஜெயிக்கலைன்னாலும் பரவாயில்லை ஹேப்பி இரு என ஸ்ருதி அட்வைஸ் கொடுத்துவிட்டு சென்றார். இறுதியாக ஆரி பிரதர் ப்ளீஸ் ரியோ கூட சண்டை போடாதீங்க, எல்லாரும் ஜாலியா ஃபன் பண்ணுங்க என்று கூறிவிட்டு ஸ்ருதி விடைபெற்றார். 

Also read... Gold Rate | தொடர்ந்து உயரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... இன்றைய நிலவரம் என்ன?இவர்களை தொடர்ந்து சோம் சேகரின் தம்பி வருகை தந்தார். அவர் அனைவரிடமும் இயல்பாக பேசிய நிலையில் இன்னும் ஸ்ட்ராங்கா விளையாடு என தனது சகோதரருக்கு அட்வைஸ் செய்தார். பின்னர் டிவியில் சோமின் அம்மா மற்றும் அவரது செல்ல நாய் குட்டு இருக்கும் வீடியோ காட்சிகள் போடப்பட்டது. இதனிடையே அவ்வப்போது ப்ரீஸ், ரிலீஸ் என ஹவுஸ் மேட்சின் சுவாரஸ்ய செயல்கள் நிறைந்திருந்தது. இதனால் நேற்று முழுவதும் பிக் பாஸ் நிலையில் கலகலப்பாக சென்றது.

இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், கேபியின் அம்மா வருகிறார். அவரை பார்த்ததும் கேபி மம்மி என ஓடிச்சென்று கட்டிப்பிடித்து அழுகிறார். ஆரியிடம் பேசிய அவரது அம்மா, நெடுஞ்சாலை படத்தில் பார்த்ததாக அவர் கூறுகிறார். மேலும் கேபி மற்றும் அவரது அம்மா தனியாக பேசுகையில், "நீ க்ரூப்பாக டாஸ்க் சிறப்பாக செய்தாலும் அதில் தனித்தன்மை ஆகவும் கொஞ்சம் போகஸ் பண்ணு' என அம்மா அட்வைஸ் கூற, 'இங்கு இருப்பவர்கள் சிலநேரங்களில் கவனிப்பதில்லை, நல்லா பண்ணாலும் அதை பாராட்ட மாட்டார்கள். சண்டை போட்டு தான் அதை வாங்க வேண்டும் என்று இல்லை. அதனால் அதை அப்படியே விட்டுவிட்டேன்" எனகேபி கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.  கேபி இந்த வார நாமினேஷன் லிஸ்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
First published: December 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading