• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • Bigg Boss Tamil 4 : ஜெயிலுக்குச் சென்ற அனிதா சம்பத்... ரியோவுடன் நேரடியாக மோதல்!

Bigg Boss Tamil 4 : ஜெயிலுக்குச் சென்ற அனிதா சம்பத்... ரியோவுடன் நேரடியாக மோதல்!

ரியோ மற்றும் அனிதா

ரியோ மற்றும் அனிதா

ஒரு கட்டத்தில் உங்க நண்பர்களுக்காக  விளையாடுறீங்க என அனிதா குற்றச்சாட்டு வைக்க 'I am not' என ரியோ கோபத்துடன் கத்துகிறார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 68 நாட்களை கடந்து விட்டது.  16 பேருடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், அர்ச்சனா, சுஜித்ரா ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வருகை தந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா,  சுரேஷ் மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தற்போது 12 பேர் உள்ள நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில், ரம்யா பாண்டியன், நிஷா, ஷிவானி, சோம் சேகர், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் உள்ளனர்.  இவர்களுக்கு வாக்கு அளிக்கும் நடைமுறையானது இன்றுடன் நிறைவடைய இருப்பதால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  குறைவான வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் நிஷா அல்லது ஜித்தன் ரமேஷ் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் புதிய மனிதா டாஸ்கின் கடைசி கட்டம் நடைபெற்ற நிலையில், அனிதாவை முட்டையை உடைத்து அதனை தொட்டு பல் துலக்குமாறு கூறி அர்ச்சனா, சோம் அவரை அவுட்டாக்கினர். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த டாஸ்க் நேற்று நிறைவடைந்த நிலையில் இந்த டாஸ்கை சிறப்பாக செய்த இருவரை தேர்ந்தெடுக்கமாறு பிக் பாஸ் அறிவித்தார். அதில் பாலாஜி, ரம்யா தேர்வு செய்யப்பட்டனர். இந்த வாரம் முழுவதும் முழு ஈடுபாடுடன் பணியாற்றிய ஒருவராக நிஷாவை தேர்வு செய்தனர். 

  இதனை தொடர்ந்து சுவாரஸ்யம் குறைவாக இருந்த இருவராக அனிதா, ரமேஷை தேர்வு செய்தனர். இதனால் கடுப்பான அனிதா நான் ஒரு ஆளாக தனியாக சமைத்தேன், இது எனக்கு தேவைதான் என கோபமாக கூறினார். ஏற்கனவே அர்ச்சனா கேங் அனிதா, ஆரியை டார்கெட் செய்வதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் அனிதாவை தேர்வு செய்ததால் அவர் கடுப்பானார். இதனை தொடர்ந்து அனிதா, ஜித்தன் ரமேஷ் ஜெயிலுக்கு சென்றனர். பின்னர் பாலாஜி - ஷிவானி தனியாக அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். 

  அப்போது பாலாஜி போடி என கூற, உனக்கு எவ்வளவு திமிர், இங்கு ரவுடிசம்  காட்டாதே என்றார் ஷிவானி. மேலும் சனம் தான் உனக்கு அழகாக பட்டம் கொடுப்பார், இப்பொது அவர் இல்லாததால் பட்டம் கொடுக்க ஆள் இல்லை, அதனால் நீ ஓவராக ஆடுகிறாய் என்றார். இதனை கேட்ட பாலாஜி நீயும் சென்று விட்டால் எனக்கு யாருமே இல்லையே என கூற, அவரது கையை பிடித்து திருகிய ஷிவானி அதென்ன, நான் சென்றுவிட்டால் நீ இருப்பியா? என கேட்ட காட்சிகளும் நேற்றைய நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரமோவோல் ஜெயிலில் இருக்கும் அனிதா, ரியோவுடன் சண்டை போட்டிருப்பது காட்டப்பட்டு இருக்கிறது.

  அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டாம் என முடிவெடுத்த ஒரு விஷயத்தை நிஷா செய்ததால் அர்ச்சனா அழுதார்கள். அதனால் கேம் சுவாரஸ்யம் குறைந்தது. அது உங்களுக்கு தப்பாக தெரியவில்லை, அப்போ நிஷா அக்கா செய்தால் உங்களுக்கு புடிக்கல, ஆனால் நான் அதே விஷயத்தை செய்தால் சுவாரஸ்யம் இல்லை என கூறுவீர்களா? என அனிதா கேள்வி எழுப்பினார். அப்போது பிடிக்கவில்லை என்பதற்கும், சுவராயஸ்யம் இல்லை என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என ரியோ கூறினார். 



  Also read... 4-வது முறையாக மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கைகோர்க்கும் நடிகர் விஜய்



  நான் கேப்டன்சி வெச்சி சொல்லவே இல்லையே என ரியோ ஒரு கட்டத்தில் சொல்ல, வாரம் முழுவதும் நடைபெற்ற அனைத்தையும் வெச்சுதான் சொல்லணும். அப்படினா தப்பா சொல்லிருக்கீங்க என சண்டையை தொடர்ந்தார் அனிதா. ஒரு கட்டத்தில் உங்க நண்பர்களுக்காக  விளையாடுறீங்க என அனிதா குற்றச்சாட்டு வைக்க 'I am not' என ரியோ கோபத்துடன் கத்துகிறார். அப்போது அனிதா ஆமா, விளையாடுறீங்கள் என அடித்து கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே அர்ச்சனா, ரியோ, நிஷா, சோம், ரமேஷ் ஆகியோர் குழுவாக விளையாடுவதாக ஆரி, பாலாஜி, அனிதா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்த பிரச்னை இந்த டாஸ்க்கிலும் தொடர்வதால் இந்த வார எலிமினேஷனுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vinothini Aandisamy
  First published: