Bigg Boss Tamil 4: ஆரியிடம் மோதும் அனிதா, ரம்யா - இன்று 'தரமான சம்பவம் இருக்கு'!

Bigg Boss Tamil 4: ஆரியிடம் மோதும் அனிதா, ரம்யா - இன்று 'தரமான சம்பவம் இருக்கு'!

அனிதா, ஆரி, ரம்யா

ஆரியிடம் டாஸ்க் குறித்து அனிதா, ரம்யா மற்றும் அர்ச்சனா ஆகிய 3 பேரும் ஆக்ரோஷமாக விவாதம் செய்கின்றனர். 

  • News18
  • Last Updated :
  • Share this:
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் உள்ளனர். 73 நாட்களை கடந்து விட்ட இந்த நிகழ்ச்சியில் தினமும் சுவாரஸ்யமான டாஸ்குகள் வழங்கப்படுவது வழக்கம். மேலும் வாரந்தோறும் லக்ஸரி டாஸ்க் வழங்கப்படுகிறது. இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் வாங்கும் பாயிண்ட்ஸ்கள் அடிப்படையில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம். அதன்படி இதுவரை புதிய மனிதா, கால் சென்டர் டாஸ்குகள் வழங்கப்பட்ட நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் கோழிப்பண்ணை டாஸ்க் வழங்கப்பட்டது. 

பிக் பாஸ் வீடு கோழிப் பண்ணையாக மாறியது. அதில் பாலாஜி, ஆரி, முதலில் கோழிகளாக இருந்தனர். அவர்களது புகைப்படம் ஒட்டிய முட்டை ஒன்று இருவருக்கும் வழங்கப்பட்டது. கோழிகள் தங்களின் தங்க முட்டைகளை நரிகள் கை படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நரிகளின் வாலை கோழிகள் தொட்டுவிட்டால் அந்த சுற்றில் இருந்து அந்த நரி வெளியேற வேண்டும்.மேலும் முட்டைகளை தொடாதவாறு நரியுடன் கோழி ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அதற்காக ஒவ்வொருக்கும் 200 பிக் பாஸ் கரன்சியும் வழங்கப்பட்டு உள்ளது. இறுதியில் யாரிடம் அதிக கரன்சி உள்ளதோ அவருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும் என பிக் பாஸ் அறிவித்தார். 

முதலில் ஆரி, பாலாஜி கோழிகளாக மாறினார். அவர்களது புகைப்படம் அடங்கிய முட்டை வழங்கப்பட்டது. இதில் ஒருவழியாக ஆரியின் முட்டையை அனிதா தொட்டுவிட்டார். இதனால் ஆரியின் 200 பணம் அனிதாவிற்கு சென்று விட்டது. அதனால் ஒரு நேரத்தில் ஒருவர் தான் முட்டையை தொட முயற்சிக்க வேண்டும் என விதி இருக்கிறது. இப்படி கூட்டமாக வந்தால் எப்படி என சண்டை போட்டார் ஆரி. இதனால் அர்ச்சனாவுடன் சற்றுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே முட்டையை தொடாமல் இருக்க சோம், ஆரி - பாலாஜி இருவரிடமும் ஒப்பந்தம் போட்டார். மேலும் ஆஜித் முட்டையை தொட்டால் இருவருக்கும் ஷேர் என ஆஜித் - பாலாஜி ஒப்பந்தம் போட்டனர். 

ஆனால் முட்டையின் மீது உட்கார்ந்ததால் பாலாஜிக்கு கொடுத்த முட்டை உடைந்துவிட்டதால் அவர் அந்த சுற்றில் பங்கேற்க பிக் பாஸ் தடை விதித்தார். இதனை தொடர்ந்து ஆஜித், ரம்யாவிற்கு முட்டைகள் வழங்கப்பட்டதால் அவர்கள் கோழிகளாக மாறினார். அப்போது அஜித்தின் முட்டையை கேபி தொட்டுவிட்டார். இதில் அர்ச்சனா, அனிதா சோம், கேபி, ரியோ , ஷிவானி ஆகியோர் நரிகளாக இருந்தனர். இந்த டாஸ்க் குறித்த சரியான புரிதல் போட்டியாளரர்களுக்கு இல்லாத நிலையில் ரசிகர்களுக்கும் டாஸ்க் போர் அடிப்பதாக தொன்றியதாக கமெண்ட்ஸ் செய்தனர்.

Also read... Gold Rate : தொடர்ந்து 3-வது நாளாக உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கோழிப்பண்ணை டாஸ்க் இரண்டாம் நாளாக இன்றும் தொடர்வது காட்டப்பட்டுள்ளது. அதில் ஆஜித்தின் முட்டையை தொடுவதற்கு ஒரு கூட்டம் முயற்சிக்கின்றது. 'ஷிவானியின் முட்டையை தொட்டுட்டேன்' என பாலாஜி கேமரா முன்பு வந்து சொல்கிறார். பின்னர் படுக்கை அறையில் அமர்ந்து தனது பணத்தை எண்ணி கொண்டிருக்கிறார். மேலும் ஆரியிடம் இந்த டாஸ்க் குறித்து அனிதா, ரம்யா மற்றும் அர்ச்சனா ஆகிய 3 பேரும் ஆக்ரோஷமாக விவாதம் செய்கின்றனர். 

அர்ச்சனா தனது முட்டையை காக்க போராடுவதும் அதை பாலாஜி தொட முயற்சிக்கும் காட்சிகளும் உள்ளது. இதேபோல அனிதா, ரியோவின் முட்டைகளை கூட்டமாக சிலர் தொடுவதும் காட்டப்பட்டுள்ளது. மேலும்அர்ச்சனா 'தரமான சம்பவம் இருக்கு' என கூறும் காட்சிகளும் முதல் ப்ரோமோ வீடியோவில் உள்ளது. இந்த டாஸ்கில் ஒரு நேரத்தில்  ஒரு நரிதான் முட்டையை தொட வேண்டும் என விதி உள்ள நிலையில் போட்டியாளர்கள் தவறாக விளையாடும் பட்சத்தில் அவர்களுக்கு லக்ஸரி மதிப்பெண் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: