பழைய படங்களை கண் முன்னே கொண்டு வந்த ஹவுஸ் மேட்ஸ்... 45 மணி நேரத்தை நோக்கி தொடரும் டாஸ்க்

பழைய படங்களை கண் முன்னே கொண்டு வந்த ஹவுஸ் மேட்ஸ்... 45 மணி நேரத்தை நோக்கி தொடரும் டாஸ்க்

45 மணி நேரமாக தொடரும் டாஸ்க்

நேற்று லக்ஜுரி பட்ஜெட் டாஸ்கான 45 மணி நேரம் நடைபெறும் மணிகூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது. நேற்று இரவு வரை காற்று, வெயில், மழையிலும் இந்த டாஸ்க் தொடர்ந்தது.

  • Share this:
பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இதுவரை ஈஸியான டாஸ்குகள்தான் கொடுக்கப்பட்டு வந்தன. தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த வாரம் எலிமினேஷன் இல்லாத நிலையில், இந்த வார நாமினேஷன் லிஸ்டில் ரியோ, பாலாஜி, சம்யுக்தா, சோம், ஆரி, அனிதா மற்றும் சுஜித்ரா ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.

இதனிடையே நேற்று லக்ஜுரி பட்ஜெட் டாஸ்கான 45 மணி நேரம்  மணிகூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் கடிகாரமாக மாறி சரியான நேரத்தைக் கணக்கிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. கார்டன் ஏரியாவில் ரயில் நிலையம், மணிக்கூண்டு அமைக்கப்பட்டிருந்தது. இதில் 3 நபர்கள் கொண்ட 5 அணிகளாக பிரிந்து ஒவ்வொரு நபர்களும் 3 மணிநேரத்திற்கு ஒரு முறை நேரத்தைக் கணக்கிட்டனர். அதில் கற்களால் அமைக்கப்பட்ட கடிகாரத்தில் முதல் நபர் மணி நேர முள்ளாக மாறி நேரத்தையும், மற்றொருவர் நிமிட முள்ளாக நொடியையும் கணக்கிட வேண்டும்.

Also read: ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி - 27ம் தேதி தொடர் ஆரம்பம்

மூன்றாம் நபர் கடிகாரத்தின் நடுவில் நின்று சரியான நேரத்தை உள்ளே இருக்கும் மற்ற போட்டியாளர்களிடம் அறிவித்து, கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் அன்றாட வேலைகளைச் செய்து முடித்துள்ளார்களா என்பதை கிளி போன்ற வேடத்தில் பார்க்க வேண்டும். கேபி, சனம், சோம், சுஜித்ரா, நிஷா ஆகியோர் மணி சொல்லும் கிளி போல வேடமிட்டுள்ளனர். மேலும் ஒரு கால அட்டவணை வைக்கப்பட்டு அதில் எந்த நேரத்தில் என்ன வேலை செய்ய வேண்டும் என எழுதியிருந்தது. அதன்படி போட்டியாளர்களும் மழை பெய்தாலும் குடையைப் பிடித்துக் கொண்டு நேரத்தை துல்லியமாக கணித்தனர்.



10 நிமிடத்தில் தண்ணீர் பிடிப்பது, அரை மணி நேரம் சமைப்பது, சாப்பிடுவது, வீட்டை சுத்தம் செய்து உள்ளிட்ட பணிகளைச் செய்யுமாறு கூறப்பட்டது. டாஸ்க் செய்யும் குழுவைத் தவிர மற்றவர்கள் இந்தப் பணிகளை மேற்கொண்டனர். இதனிடையே அரை மணி நேரத்திற்கு ஜிப்ரிஷில் பேச வேண்டும் என பிக் பாஸ் அறிவித்தார். அதன்படி ஹவுஸ் மேட்ஸ் வார்த்தைகள் எடுத்தும் இல்லாமல் புரியாமல் பேசி மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து அரை மணி நேரம் பழைய படங்களில் பேசுவதுபோல வேடிக்கையாக பேசவேண்டும் என கூறப்பட்டது. அதன்படி, கேபி, ரியோ ஆகியோர் ஜோடியாக நடித்து காட்டினர். அனிதா எம்ஆர் ராதா அவர்களைப்போல அழகாக நடித்துக் காட்டினார்.


நேற்று இரவு வரை காற்று, வெயில், மழையிலும் இந்த டாஸ்க் நடைபெற்ற நிலையில், தொடர்ந்து 45 மணி நேரம் என்பதால் விடியவிடிய மற்ற அணியினர் டாஸ்கைச் செய்வது முதல் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது. அதில் பாலாஜி, ரமேஷ், சம்யுக்தா, ஷிவானி, ஆஜித் ஆகியோர் இன்று தங்களது டாஸ்கைச் செய்கின்றனர். நடு இரவிலும் டாஸ்க் தொடர்கிறது. நிஷா, சனம் தூங்கி விழும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதனிடையே சிலர் பேய்கள் போல வேடமணிந்து கலகலப்பூட்டும் காட்சிகளும் உள்ளன. காற்று, மழை என அனைத்தும் கடந்து இந்த டாஸ்க்கில் வெற்றி பெறப்போவது யார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Published by:Rizwan
First published: