பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த கிஃப்ட்!

கமல் ஹாசன்

பிக் பாஸ் டைட்டிலை கைப்பற்ற, ஆரி, ரியோ ராஜ், பாலா, ரம்யா பாண்டியன் மற்றும் சோம் ஆகிய 5 போட்டியாளர்களிடையே கடுமையான போட்டி உள்ளது.

 • Share this:
  பிக் பாஸ் இறுதி போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் கமல் ஹாசன் பரிசளித்து ஆச்சர்யப்படுத்தினார்.

  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ-வின், கடைசி எபிசோடான - கிராண்ட் ஃபினாலே இன்று மாலை 6 மணி முதல் ஒளிபரப்பாகிறது.  இந்த நான்காவது சீசனின் டைட்டிலை யார் பெறுவார்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். 

  பிக் பாஸ் டைட்டிலை கைப்பற்ற, ஆரி, ரியோ ராஜ், பாலா, ரம்யா பாண்டியன் மற்றும் சோம் ஆகிய 5 போட்டியாளர்களிடையே கடுமையான போட்டி உள்ளது. இந்த 5 இறுதிப் போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் 100 நாட்களுக்கு மேல் இருந்து மக்களின் கவனத்தையும் இதயத்தையும் வென்றிருக்கிறார்கள். 

  இந்நிலையில் பிக் பாஸ் தொகுப்பாளரான கமல்ஹாசன் இறுதிப் போட்டியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். ரியோவுக்கு ட்ரெக்கிங் கிட், பாலாவுக்கு டம்பெல்ஸ், ரம்யாவுக்கு ஆர்கானிக் விதைகள், சோமுக்கு இசைக்கருவி, ஆரிக்கு பேனா மற்றும் டைரியை அவர் வழங்கியுள்ளார்,   உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: