முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Bhumika Chawla: சல்மான் கான் ஷோவில் நானா? மறுத்த பூமிகா சாவ்லா!

Bhumika Chawla: சல்மான் கான் ஷோவில் நானா? மறுத்த பூமிகா சாவ்லா!

பூமிகா சாவ்லா

பூமிகா சாவ்லா

பூமிகா கடைசியாக தமிழில் நயன்தாராவுடன் கொலையுதிர்காலம் படத்தில் நடித்தார். தற்போது உதயநிதியின் கண்ணை நம்பாதே படத்தில் நடிக்கிறார்.

  • Last Updated :

பத்ரியில் விஜய்யுடன் நடித்த பூமிகா சாவ்லா இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீஸனில் பூமிகா சாவ்லா பங்கேற்பதாக ஒரு செய்தி வெளியானது. இதனை அவர் மறுத்துள்ளார்.

அது குறித்து ட்விட்டரில் கமெண்ட் செய்திருப்பவர், "இது போலி செய்தி. பிக் பாஸில் கலந்து கொள்ளச் சொல்லி யாரும் கேட்கவில்லை. கேட்டாலும் அதில் பங்கேற்பதாக இல்லை. பிக்பாஸ் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று சீஸன்களின் போது என்னிடம் கேட்டார்கள். பிறகு சிறிது காலம் கழித்து மீண்டும் கேட்டார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போதும் நான் முடியாது என்று மறுத்தேன். ஆனால், இந்தமுறை யாரும் கேட்கவில்லை. நான் பப்ளிக் பர்சனாலிட்டிதான் ஆனாலும் தனிமையான நபர். 24 மணிநேரம் கேமராவில் தோன்ற முடியாது" என கூறியுள்ளார்.

Also read... Anushka Shetty: புதிய படங்களில்லை... ஸ்டேன்ட் அப் காமெடியனுக்கு ஜோடியாகும் அனுஷ்கா?

பூமிகா கடைசியாக தமிழில் நயன்தாராவுடன் கொலையுதிர்காலம் படத்தில் நடித்தார். தற்போது உதயநிதியின் கண்ணை நம்பாதே படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் கோபிசந்த், தமன்னா நடித்திருக்கும் சீட்டிமார், பாலகிருஷ்ணாவின் அகண்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.

top videos

    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    First published:

    Tags: Salman khan