பிக்பாஸ் பிரபலத்திற்கு கொலை மிரட்டல் -மர்ம நபரிடம் விசாரணை

பிக் பாஸ்

பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துக்கொண்ட சனம் ஷெட்டிக்கு மர்ம நபர் ஒருவர் தொலைப்பேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

 • Share this:
  நடிகையும், பிக் பாஸ் சீஸன் 4 இல் கலந்து கொண்டவருமான சனம் ஷெட்டிக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  படங்களில் தலைகாட்டினாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியே சனம் ஷெட்டியை பிரபலப்படுத்தியது. இன்னொரு பிக் பாஸ் பிரபலமான தர்ஷனுடனான இவரது நட்பு ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மூலமாக சனம் ஷெட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளான். சனம் ஷெட்டியின் பர்சனல் போன் நம்பரை எப்படியோ தெரிந்து கொண்டு போன் செய்தும், எஸ்எம்எஸ் மூலமாகவும் மிரட்டல் விடுத்துள்ளான். தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து சனம் ஷெட்டி இது குறித்து போலீசில் புகார் தெரிவித்தார்.

  Actress Sanam Shetty slams MNM quitters Mahendran Padmapriya and Santhosh Babu

  போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த மிரட்டல் வேலையை செய்தது ராய் ஜான் பால் என்பவன் என தெரிய வந்துள்ளது. எதற்காக மிரட்டல் விடுத்தான், அவனது நோக்கம் என்ன என்று போலீசார் விசாரித்து வருவதாக சனம் ஷெட்டி கூறியுள்ளார்.. இதுபோல் மிரட்டல் வந்தால், உடனடியாக போலீஸிடம் புகார் தெரிவிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: