அனிதா சம்பத்தின் தந்தை மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பிக்பாஸ் பிரபலங்கள்..

அனிதா சம்பத்தின் தந்தை மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பிக்பாஸ் பிரபலங்கள்..

அனிதா சம்பத்

பிக்பாஸ் போட்டியாளரான அனிதா சம்பத்தின் தந்தை மறைவுக்கு நேரில் ஆறுதல் சொல்ல சக போட்டியாளர்கள் சென்றுள்ளனர்.

 • Share this:
  பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது.செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கிய அனிதா சம்பத். பிக்பாஸ் வீட்டில் கடுமையான போட்டியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் 84 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த அனிதா 10-வது போட்டியாளராக கடந்த வார இறுதியில் வெளியேறினார். மேலும் தனது புத்தாண்டை வீட்டில் கொண்டாட வேண்டும் எனவும் கமலிடம் கூறினார்.

  ஆனால் நேற்று அனிதா சம்பத்தின் தந்தை ஆர்.சி.சம்பத் இறந்துவிட்டதாக வந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தரிசனத்திற்காக ஷீரடி சென்ற அனிதாவின் தந்தை ரயிலில் திடீரென இறந்துள்ளார்.  மேலும் தந்தையின் மரணம் பற்றி அனிதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் சில உருக்கமான பதிவு செய்துள்ளார். அதில் ‘என்னால் அவர் இல்லை என்பதை நம்பமுடியவில்லை. டாடி நீ வீட்டுக்கு வரனும். உன்கிட்ட நிறைய பேசணும். உன் வாய்ஸ் கேட்டு 100 நாள் மேல ஆச்சு’ என்று கூறியிருந்தார்.அனிதாவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.  இந்நிலையில் அனிதாவின் தந்தையின் மரணத்திற்கு நேரில் ஆறுதல் சொல்ல பிக்பாஸில் அனிதாவுடன் சக போட்டியாளராக பங்குப்பெற்ற அர்ச்சனா,நிஷா,ரேகா, சுரேஷ் ஆகியோர் சென்றுள்ளனர்.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Tamilmalar Natarajan
  First published: