பிக்பாஸிற்கு பிறகு ‘வாடி ராசாத்தி‘ என்று பாடி கேபியை வரவேற்ற அவரின் தோழி..( வீடியோ)
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கேபிரியல்லா தனது தோழியை நேரில் சென்று சந்தித்துள்ளார்.அந்த வீடியோவை அவரின் தோழி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் அக்டோபர் 4 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் 100 நாட்களை கடந்து கேபி, ஆரி, பாலாஜி, சோம், ரம்யா, ரியோ ஆகிய ஆறு போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர். அதன் பின் 5 லட்சம் மதிப்புள்ள பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு கேபி வெளியேறினார்.
கேபி எடுத்த முடிவு சரி தான் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதனை தொடர்ந்து பிக்பாஸ் ஃபினாலே 17 ஆம் தேதி கோலாகலமாக நடைப்பெற்றது. முதலில் பிக்பாஸ் வீட்டிலிருந்து சோம் வெளியேற்றப்பட்டார். பின் வரிசையாக ரம்யா, ரியோ ஆகியோரும் வெளியேற்றப்பட்டனர். கடைசியாக பிக்பாஸ் வீட்டில் ஆரியும், பாலாவும் இருந்தனர்.
பின்பு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரி அரிஜுனன் அறிவிக்கப்பட்டார். ரன்னராக பாலாஜி முருகதாஸ் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ரியோ, ரம்யா மூன்றாவது, நான்காவது இடத்தை பிடித்தனர்.
இந்நிலையில் 100 நாட்களுக்கு பிறகு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த போட்டியாளர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த கேபிரியல்லா தனது தோழியை நேரில் சென்று சந்திக்கும் வீடியோவை அவரின் தோழியான ஸ்ரீநிதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இருவரும் ஓடி சென்று நெகிழ்ச்சியுடன் கட்டி அனைத்து கொள்கின்றனர்.
அந்த பதிவில் ‘ எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது கமலிடம் அவள் நேர்மையாக விளையாடுவேன் என்று கூறியது. எங்கள் அனைவருக்கும் தெரியும் அவள் அப்படித்தான் விளையாடி இருக்கிறாள். கேபி சூட்கேஸை எடுக்கும் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு முன்னர், நாங்கள் அனைவரும் கேபி சூட்கேஸை எடுத்து வந்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தோம். ஆனால் உண்மையில் அவள் அதை செய்த போது எங்களுக்கு மெய் சிலிர்த்தது. இவ்வளவு அறிவு என் செல்லக்குட்டிக்கு எங்க இருக்குனு யோசிக்க வச்சிட்ட.நீ அனைத்திற்கு தகுதியானவள்’ என்று பதிவிட்டுள்ளார்.