• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’உங்கள் அன்பு-வெறுப்பு மழையில் சோர்வடைந்துவிட்டேன்’- பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அர்ச்சனா எடுத்த திடீர் முடிவு

’உங்கள் அன்பு-வெறுப்பு மழையில் சோர்வடைந்துவிட்டேன்’- பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அர்ச்சனா எடுத்த திடீர் முடிவு

அர்ச்சனா

அர்ச்சனா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ட்விட்டரை விட்டு வெளியேறுவதாக அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

  • Share this:
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்று பின்பு எலிமினேட் செய்யப்பட்ட அர்ச்சனா ட்விட்டரை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

    பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்துக்கொண்டிருந்தவர் அர்ச்சனா. இவர் கிட்டத்திட்ட 20 வருடங்களாக சின்னத்திரையில் உள்ளார். திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றுள்ளார்.

    இதையடுத்து அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா வீட்டிற்கு சென்றார். 69 நாட்கள் கடந்த பின்பு வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டில் 10 போட்டியாளர்களே உள்ளனர். இந்த வாரம் அனிதா சம்பத் எலிமினேட் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனாவிற்கு சமூக வலைதளங்களில் நிறைய ஹேட்டர்ஸ்கள் உருவாகி இருந்ததால், தான் ட்விட்டரிலிருந்து வெளியேறுவதாக அர்ச்சனா தெரிவித்துள்ளார் .அதில் ‘உங்களின் அன்பு -வெறுப்பு மழையில் நான் சோர்வடைந்துவிட்டேன். நான் ட்விட்டரை விட்டு வெளியேறுவதை கொண்டாடுபவர்களே, நான் மீண்டும் வருவேன். குட் பை ட்விட்டர்’ என்ற கூறி விஜய் தொலைக்காட்சியை டாக் செய்துள்ளார்.



     

    மேலும் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் போட்டியாளார்களுடன் நடிகர் ஜெயம் ரவி உரையாடும்  வீடியோ பிக்பாஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இரண்டாவது ப்ரோமோவில் ஒரு காலர் ஆரியை வச்சி செய்கிறார். அதற்கு ஆரியோ கொஞ்சமும் அசராமல் பதிலளிக்கிறார்.இ றுதி கட்டத்தை நெருங்கியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: