சேஃப் கேம் நானும் விளையாடல, ஆரியும் விளையாடல! கொதித்தெழுந்த பாலா.. சல்யூட் செய்த ஆரி..

சேஃப் கேம் நானும் விளையாடல, ஆரியும் விளையாடல! கொதித்தெழுந்த பாலா.. சல்யூட் செய்த ஆரி..

பாலா-ஆரி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோவில் பாலா, ஆரியை தன்னுடன் சேர்த்துக்கொண்டு மற்ற ஹவுஸ் மேட்ஸ்களை சுட்டிக்காட்டி பேசும் ப்ரோமோ வெளியாகிவுள்ளது.

  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஆஜித் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் தற்போது 7 போட்டியாளர்களே உள்ள நிலையில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. டாஸ்க்கில் வெற்றிப்பெற இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் தங்களின் முழு திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

7 டாஸ்குகள் முடிவில் ரியோ-32, சோம்-32, பாலா-30, ஷிவானி-28, ரம்யா-28,ஆரி-24, கேபி-22 ஆகிய மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 8வது டாஸ்க்கில் போட்டியாளர்களுக்கு டைட்டில் கொடுக்கும் டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் போட்டியாளர்களின் உருவங்கள் இருக்கும் கட் அவுட் வைக்கப்பட்டிருக்கும். வாசகங்கள் அடங்கிய டைட்டிலை ஒவ்வொருவராக முன்னின்றி யாருக்கு பொருந்தும் என கூற வேண்டும். பின்பு அதிக நபர்களால் கூறப்பட்டவருக்கு அந்த டைட்டிலை கொடுக்க வேண்டும்.

அந்த டாஸ்க் இன்றும் நடைபெறுகிறது. அதன் ப்ரோமோ வெளியாகிவுள்ளது. அதில் ஹவுஸ் மேட்ஸ் முன் நின்று பேசும் பாலா ‘இந்த கேம் எப்படி போய்ட்டு இருக்குனா, எனக்கும் ஆரி பிரதர்க்கும் பிரச்சனை. அதனால எங்க ரெண்டு பேர் கூட எல்லார்க்கும் பிரச்சனை. வழக்கம் போல நானும் அவரும் தான் ஈக்குவலான கெட்டவர் இந்த வீட்ல, சில சம்பவங்கள மட்டும் எடுத்துட்டு வந்து இந்த இடத்துல கருத்து பதிவு பண்ற மாதிரி இருக்கு. சேஃப் கேம் நானும் விளையாடல. அவரும் விளையாடல. இங்க சேஃப் கேம் விளையாடதது இந்த இடத்துல நிறைய பேருக்கு பாதிப்ப ஏற்படுத்துச்சு. அதுல நானும் ஒருத்தன்’ என்று சொல்லிவிட்டு கெத்தாக நடத்து செல்லுகிறார். அதற்கு ஆரி, பாலாவை பார்த்து சல்யூட் செய்கிறார்.இந்த டாஸ்க்கின் வெற்றியாளர் யார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும். 100 நாட்களுக்கு 4 நாட்களுக்கே உள்ள நிலையில் ஆரியும், பாலாவும் கைக்கோர்ப்பது பிக்பாஸ் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் அடுத்த டாஸ்க் நடைபெறுவது தெரிகிறது. அதில் ஒரு மேடையில் ரம்யா மற்றும் ஷிவானி கயிற்றை தாங்கி பிடித்தவாறு விடாமுயற்சியுடன் நிற்கின்றனர். அவர்கள் அருகே ஒரு கூடையில் மஞ்சள் நிற பந்துகள் வைக்கப்பட்டுள்ளது.


அப்போது இருவருமே மிகவும் கடினமாக போராடி கண்கள் கலங்கியவாறு இந்த டாஸ்கில் ஈடுபட்டுள்ளது தெரிகிறது. இவர்களை சக ஹவுஸ் மேட்ஸ் உற்சாகப்படுத்த, பின்புறத்தில் "சிங்கப்பெண்ணே" பாடல் ஒலிக்கிறது. இதனை தொடர்ந்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் பந்துகளை ஏறிகின்றனர். அப்போது ஷிவானி திணறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. பந்துகளை மாறி மாறி எறிந்து கொள்ளலாம். ஆனால் கயிற்றின் பிடியை விடக்கூடாது என டாஸ்க் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று டிக்கெட் டு பினாலே டாஸ்கின் இறுதிநாள் இன்றா? அல்லது நாளையா? என்பது இன்று தெரியவரும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: