ஷிவானி டாப்பிக்க உடுய்யா... ஆரியிடம் கடுப்பாகி கத்திய பாலா..

ஷிவானி டாப்பிக்க உடுய்யா... ஆரியிடம் கடுப்பாகி கத்திய பாலா..

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டின் 90வது நாளான இன்று ஆரியும்,பாலாவும் கடுமையாக சண்டையிடும் ப்ரோமோ வெளியாகிவுள்ளது.

 • Share this:
  பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி  தொடங்கப்பட்டு இன்று வெற்றிகரமாக 90வது நாளை தொட்டுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 9 போட்டியாளர்களே உள்ளனர். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து அனிதா சம்பத் வெளியேற்றப்பட்டார்.

  இதையடுத்து வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கின் போது வீட்டில் உள்ள போட்டியாளர்களின் குடும்பத்தில்  உள்ளவர்கள் வீட்டிற்குள் வந்து சில மணி நேரம் போட்டியாளர்களுடன் செலவிடலாம். அப்போது பிக்பாஸ் ப்ரீஸ் சொன்னால் போட்டியாளர்கள் அசையாமல் நிற்க வேண்டும். இந்த டாஸ்க்கில் ஷிவானியின் அம்மா உள்ளே வந்து ஷிவானியை திட்டியது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டது. ஒரு சிலர் ஷிவானியின் அம்மா பேசியது சரி என்றும், இன்னும் சிலர் ஷிவானி அம்மா அந்த மாதிரி வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கக் கூடாது எனவும் விமர்சனங்களை கூறி வந்தனர்.

  இந்நிலையில் 90 நாளை எட்டிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகிவுள்ளது. அதில் ஆரி மற்றும் பாலா இடையே விவாதம் ஏற்படுகிறது. காதல் கண் கட்டுதுனு சொன்னிங்கல்ல அந்த காதல பாத்தீங்களா என ஆரியிடம் பாலா கேக்க, அதற்கு ஆரியோ இவ்வளோ தைரியம் இருந்தா அவுங்க அம்மாட்ட பேச வேண்டியது தானே என ஆரி கேட்கிறார். வீட்டில் உள்ள அனைவரும் இருவரையும் சமாதானம் செய்ய, ஆரி உடனே ஷிவானி டாப்பிக் யார் எடுத்தா இப்பொ என்று கேட்க, பாலா உடனே கோவத்தின் உச்சிக்கே சென்று, ஷிவானி டாப்பிக்க உடுயா என்று பல முறை கத்துக்கிறார்.

   

   


  இன்னும் 10 நாட்களில் இறுதி கட்டத்தை எட்டவுள்ள பிக்பாஸ் வீட்டில் இன்று பூகம்பம் வெடித்துள்ளது ரசிகர்களிடம் உள்ளே ஆர்வத்தை அதிகரித்துள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Tamilmalar Natarajan
  First published: