பிக்பாஸ் ஃபைனலுக்கு நேரடியாக செல்லும் நபர் இவர் தான்! வீடியோ

news18
Updated: September 13, 2018, 5:18 PM IST
பிக்பாஸ் ஃபைனலுக்கு நேரடியாக செல்லும் நபர் இவர் தான்! வீடியோ
பிக்பாஸ் பங்கேற்பாளர்கள்
news18
Updated: September 13, 2018, 5:18 PM IST
ஆரவ் கொடுத்த டாஸ்க்கில் வெற்றிபெறும் ஒருவரை பிக்பாஸ் ஃபைனலுக்கு தேர்வு செய்யப்பட இருப்பதாக நிகழ்ச்சிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் 10 பேர் இதுவரை வெளியேறியுள்ளனர். இந்த வார எலிமினேஷனில் ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, மும்தாஜ், ரித்விகா ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த வாரத்தில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். அந்த வகையில் கடந்த முறை பிக்பாஸ் டைட்டிலை வென்ற ஆரவ் இறுதியாக பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். அவர் வீட்டிலிருக்கும் போட்டியாளருக்கு டாஸ்க் கொடுக்கும் வீடியோ ஒன்றை நிகழ்ச்சிக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் வெற்றிபெறும் நபருக்கு ஃபைனலுக்கு செல்லும் டிக்கெட்டை வழங்க இருப்பதாகவும் ஆரவ் தெரிவித்துள்ளார். இந்த டாஸ்க்கில் எலிமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களும் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே எவிக்‌ஷனுக்காக மக்கள் வாக்களிக்க தொடங்கிவிட்ட நிலையில் இந்த டாஸ்க்கில் வெற்றி பெறும் நபர் வெளியேற்றப்படுவாரா என்ற கேள்வியும் எழுகிறது.

First published: September 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்