Home /News /entertainment /

டிஆர்பி-யில் பின்னுக்கு தள்ளப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி.. முதலில் இருப்பது இந்த சன்டிவி சீரியல் தான்!

டிஆர்பி-யில் பின்னுக்கு தள்ளப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி.. முதலில் இருப்பது இந்த சன்டிவி சீரியல் தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

எப்போதும் முதலிடம் பிடிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு சீரியலால் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட சன் டிவி-யின் சீரியல் அதிக புள்ளிகளை பெற்றுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
விஜய் தொலைக்காட்சியில் எப்போதும் வெற்றிகரமாக ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ். இதுவரை, இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது 5வது சீசன் ஒளிபரப்பட்டு 68 நாட்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சி விஜய் டிவிக்கு மிக முக்கியமான நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில், மற்ற தொலைக்காட்சி சேனல்களின் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளி எப்போதும் முதலிடத்தை பிடிக்கும் நிகழ்ச்சியாக இருக்கும். இதற்கு, ஒரு காரணம் ஒவ்வொரு சீசனிலும் வரும் போட்டியாளர்கலும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உலக நாயகன் கமல்ஹாசனும் தான். இதனால் மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் டிஆர்பி வரிசையில் பின்னுக்கு தள்ளப்படுவது வழக்கம்.

ஆனால் தற்போது ஒளிபரப்பட்டு வரும் சீசன் அவ்வளவாக ரசிகர்களின் ஆதரவை பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சி ஆரம்பான போதே, இதில் வரும் ஓரிரு முகங்களை தவிர்த்து வேறு யாரையுமே தெரியவில்லையே என்ற விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. மேலும் சில எபிசோடுகள் சென்ற நிலையில், நிகழ்ச்சி அவ்வளவு சுவாரசியமாக இல்லை என்றும் மக்கள் மத்தியில் கருத்துக்கள் எழுந்தன.

ALSO READ |  ரஜினிகாந்த் என்னும் மகா கலைஞன்

இதையடுத்து, பல விதவிதமான டாஸ்குகள் வழங்கப்பட்டு அதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை நிகழ்ச்சி ஈர்க்கத் தொடங்கியது. இது புறம் இருக்க, பிக்பாஸ்க்கு போட்டியாக, இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ஜீ தமிழில் சர்வைவர் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. அதிலும் பிரபல ஆக்ஷன் கிங் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் பலரின் கவனம் சர்வைவர் நிகழ்ச்சி பக்கம் திரும்பியது.

அதேபோல சன் டிவி- யில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி நடைபெற்றது. இவை கூட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ஆர்வத்தை குறைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த வார TRP குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அதில், எப்போதும் முதலிடம் பிடிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு சீரியலால் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆம், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட சன் டிவி-யின் பூவே உனக்காக தொடர் அதிக புள்ளிகளை பெற்றுள்ளது. பொதுவாக சீரியல்களின் டிஆர்பி வரிசையில் எப்போதும் முன்னிலையில் இருப்பது சன் டிவி சீரியல்கள் மட்டுமே.

ALSO READ |  கொண்டாடி மகிழ்வதை விட்டுவிட்டு வழக்கா? டி.ஆர். மீது தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி அதிருப்தி

அதற்கு போட்டியாக சில விஜய் டிவி சீரியல்களும் டாப் 10 வரிசையில் இடம் பெறுவதுண்டு. சில நேரங்களில் விஜய் டிவி சீரியலான பாரதி கண்ணம்மா டிஆர்பி-யில் முதலிடம் பிடிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், எப்போதும் உச்சத்தில் இருக்கும் விஜய் டிவி-யின் ரியாலிட்டி ஷோவையே பின்னுக்கு தள்ளியுள்ளது சன்டிவி சீரியல். முன்னதாக, எட்டு மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த 'பூவே உனக்காக' விஜய் டிவி-க்கு பொட்டியாக10 மணிக்கு மாற்றி பிக் பாஸ் நேரத்தில் ஒளிபரப்ப தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Big boss tamil, Sun TV

அடுத்த செய்தி