பிக்பாஸ் இறுதிச்சுற்றுக்கு நேரடியாகச் செல்லப்போகும் நபரை அறிவிக்கும் கமல்ஹாசன்!

பிக்பாஸ் போட்டியாளர்கள்

Bigg Boss Tamil 3 | மொத்தத்தில் இன்று காரசாரமான கேள்விகள் விவாதங்களோடு நிகழ்ச்சி செல்லும் என்பதில் ஐயமில்லை.

 • News18
 • Last Updated :
 • Share this:
  90வது நாளான இன்று பிக்பாஸ் நிகழ்சியின் இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்ல கோல்டன் டிக்கெட் யாருக்குக் கிடைக்கப் போகிறது என்ற தகவலை கமல் அறிவிக்கப்போவது போன்ற வீடியோவை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது.

  கடந்த ஜூன் மாதம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

  இந்த 6 பேரில் யார் இறுதி கட்ட டைட்டிலை ஜெயிக்கப் போகிறார்கள் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் அனைத்துப் போட்டிகள், விதிகளை சரியாகப் பின்பற்றும் நபரை நிகழ்ச்சிக் குழுவே தேர்வு செய்து இறுதிச் சுற்றுக்கு அனுப்பி வைக்கும். அதை கோல்டன் டிக்கெட் என்பார்கள். அந்த கோல்டன் டிக்கெட் யாருக்கு கொடுக்கப் போகிறார்கள் என்பதை கமல் இன்று அறிவிக்க இருப்பது போன்ற புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

  அதோடு கடந்த வாரம் வீட்டில் இறுதி சுற்றுக்குச் செல்லும் கடுமையான போட்டிகள் நடைபெற்றன. இதனால் வீட்டில் இருப்போர் வெற்றியை நோக்கிய முணைப்பில் இருப்பதால் மோதல்களும் கடுமையாக இருந்தன.  அதில் கவின் , லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகியோரிடையே கடுமையான வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. இந்த சம்பவங்களை வைத்தே இன்றைய நாள் இருக்கும் என கமலின் பேச்சால் யூகிக்க முடிகிறது.

  நிகழ்ச்சிக் குழு வெளியிட்ட முதல் புரோமோவில் கமல் “ இது உடல் மோதும் போட்டியா.. மனம் மோதும் போட்டியா என்று கேள்வி எழுப்புகிறார். மனம் மோதும் போட்டிதான் அதிக வலியைத் தரும் என்று கூறும் கமல் அவர்கள் எந்த யுத்தியைக் கையாள்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதாக இன்றைய கமல் பேச்சு இருக்கும் என்பதையே வீடியோ உணர்த்துகிறது.

  மொத்தத்தில் இன்று காரசாரமான கேள்விகள் விவாதங்களோடு நிகழ்ச்சி செல்லும் என்பதில் ஐயமில்லை.
  Published by:Sivaranjani E
  First published: