Home /News /entertainment /

Big Boss Archana: தன்னை விமர்சித்த நெட்டிசன்களுக்கு நாசூக்காக பதிலடி கொடுத்த பிக்பாஸ் அர்ச்சனாவின் மகள்!

Big Boss Archana: தன்னை விமர்சித்த நெட்டிசன்களுக்கு நாசூக்காக பதிலடி கொடுத்த பிக்பாஸ் அர்ச்சனாவின் மகள்!

பிக் பாஸ் அர்ச்சனா - மகளுடன்

பிக் பாஸ் அர்ச்சனா - மகளுடன்

தனது வயதுக்கு தகுந்தார் போல் பேசாமல், வயதை மீறி பேசுவதாகவும் ஓவர் ஆட்டிட்டியூட் காட்டுவதாகவும் நெட்டிசன்கள் சமீபத்தில் சாராவை விமர்சித்தனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
சின்னத்திரை பிரபலமான அர்ச்சனா நெட்டிசன்களால் அவ்வப்போது ட்ரோல் செய்யப்படுவது ஒருபுறம் இருக்க, சிலர் அவரது மகள் சாராவையும் விமர்சித்து வருகின்றனர். 'அன்பு தான் ஒருவரின் அடையாளம்" என்ற தன் தாயின் வார்த்தைக்கு ஏற்ப சாரா தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நாசூக்காக பதிலடி கொடுத்து வருகிறார். உலகநாயகன் நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4-ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார் வி.ஜே. அர்ச்சனா.

வைல்ட் கார்ட் என்ட்ரியாக 11-ம் நாளில் நுழைந்த அர்ச்சனா 77-ம் நாளில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அர்ச்சனாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது பிக் பாஸ். ஏனென்றால் அதற்கு முன் வரை விஜே-வாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்த அர்ச்சனா, பின்னர் பலரது நேரடி விமர்சனங்களுக்கு ஆளானார். முதலில் 1999-ல் ஜெயா டிவியில் ஆங்கில செய்திகளில் செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை துவங்கிய அர்ச்சனா, சன் டிவி-யின் காமெடி டைம் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்கள் மத்தியில் நற்பெயரை மட்டுமே சம்பாதித்திருந்த அவர், பிக் பாஸ் மூலம் ஏரளமான ஹேட்டர்களை சம்பாதித்து கொண்டார் என்று தான் கூற வேண்டும்.

இதற்கு முக்கிய காரணம் பிக் பாஸில் அன்பை பற்றி மட்டுமே பேசி குரூப்பிஸம் செய்ததாக ரசிகர்கள் நினைத்து தான். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததில் இருந்து தற்போது வரை சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் நெட்டிசன்கள் அர்ச்சனாவை ரோஸ்ட் செய்து வருகின்றனர். அவரை மட்டுமல்லாமல் யூடியூப் சேனலில் அர்ச்சனாவுடன் சேர்ந்து அதிகம் தலைகாட்டும் அவரது மகள் ஸாராவையும் ஹேட்டர்கள் விட்டு வைக்காமல் விமர்சித்து வருகின்றனர். இப்படி சமீபத்தில் தன்னை பற்றி விமர்சித்தவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் சாரா.
எப்போதும் சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அர்ச்சனாவின் மக்ள் சாரா. அர்ச்சனா பிக் பாஸில் பங்கேற்ற போது பேட்டி அளித்ததன் மூலம் பிரபலமானார். சோஷியல் மீடியாக்களில் கணிசமான ஃபாலோயர்ஸ் வைத்திருக்கிறார். இவர் தனது வயதுக்கு தகுந்தார் போல் பேசாமல், வயதை மீறி பேசுவதாகவும் ஓவர் ஆட்டிட்டியூட் காட்டுவதாகவும் நெட்டிசன்கள் சமீபத்தில் சாராவை விமர்சித்தனர்.

அர்ச்சனா மகளின் இன்ஸ்டா ஸ்டோரிஸ்


இதற்கு பதில் அளித்துள்ள சாரா, " என்ன பாக்காம, என்கிட்ட பேசாம இப்படி ஒரு குற்றச்சாட்டை என் மீது வைத்தால் நா என்ன சொல்றதுன்னு தெரில. டேக் கேர்" என நாசூக்காக பதிலடி கொடுத்தார். அதே போல வேறு ஒரு நெட்டிசன், ஓவர் மெச்சுர்டுன்னு காட்ட நீங்க சீன் போடுறீங்கனு சொல்றாங்களே உண்மையா என கேட்டதற்கு, என்னால முடியல சார், விட்ருங்க எமோஜியுடன் வேடிக்கையாக ரிப்ளை கொடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே போல என்னுடைய வயதுக்கு மீறிய மெச்சூரிட்டியை நான் காட்டுவதாக கூறும் மக்களுக்காக நான் நீண்ட நாட்களாக சொல்ல விரும்பிய ஒன்று என கூறி Oh baby no baby, you got me all wrong baby! என்ற பாடலை பாடி அதை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.
Published by:Arun
First published:

Tags: Archana biggboss, Big boss\, Entertainment, Instagram, Tamil Cinema, Trending

அடுத்த செய்தி