பிக்பாஸ்வீட்டிலிருந்துமும்தாஜ் இன்று வெளியேறினார். இதனால், இம்முறையும் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 10 பேர் வெளியேறியுள்ளனர். இந்த வார நாமினேஷனில் மும்தாஜ், ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்த வார நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் வெற்றிபெறும் போட்டியாளர் இறுதி வாரத்திற்கு நேரடியாக செல்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, ஜனனி இந்த டாஸ்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
இந்நிலையில், இந்த வாரம் வெளியெறும் நபர் மும்தாஜ் என கமல்ஹாசன் இன்று அறிவித்தார். கடந்த வாரமே ஐஸ்வர்யா வெளியேறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. எனவே, இந்த வாரம் ஐஸ்வர்யா நிச்சயமாக வெளியேற்றப்படுவார் என அனைவரும் எதிர்ப்பார்த்தனர். இதற்கு மாறாக, மும்தாஜ் பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேற்றப்பட்டார்.
Published by:DS Gopinath
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.