• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Biggboss 4 Tamil | கனமழையிடையே தொடர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி.. சனம்-ரியோ இடையே தீராத மோதல்..

Biggboss 4 Tamil | கனமழையிடையே தொடர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி.. சனம்-ரியோ இடையே தீராத மோதல்..

கன மழையிடையே தொடரும் பிக் பாஸ் நிகழ்ச்சி

கன மழையிடையே தொடரும் பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட் தண்ணீர் மூழ்கிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள நிகழ்ச்சிக் குழு, வழக்கம்போல ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது

  • Share this:
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியிலிருந்து இதுவரை ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, வேல்முருகன், சுசித்ரா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், இந்த வார நாமினேஷன் லிஸ்டில் சோம், பாலாஜி, ஆரி, ஜித்தன் ரமேஷ், சம்யுக்தா, சனம் ஷெட்டி மற்றும் நிஷா ஆகியோர் உள்ளனர்.

இதனிடையே நிவர் புயலால் சென்னையில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட் தண்ணீர் மூழ்கிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள நிகழ்ச்சிக் குழு, தொடர்ந்து தடையின்றி பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் வழக்கம் போல ப்ரோமோ விடியோவை வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கால் சென்டர் டாஸ்க் வழங்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ரியோ, ஆஜித்திற்கு கால் செய்து பேசியபோது சனம் ஷெட்டியைப் பற்றிய ஒரு கேள்வியை ரியோ கேட்டார். எல்லாமே கேம் என கூறும் சனம், அனிதா இடையே கூட ஒரு நட்பு வந்திருக்கிறது, அது பார்க்க அழகாக இருக்கிறது என தெரிவித்தார். இதனைத் தவறாக புரிந்துகொண்ட சனம், ”மற்றவர்கள் இடையே நட்பு வந்தால் அது இயற்கை. ஆனால் எங்கள் இருவரும் இடையிலான நட்பு ஆச்சர்யமாக இருக்கா, நாங்க மட்டும் என்ன மான்ஸ்டரா?” எனக் கேட்டார்.

இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்ற நிலையில், ரியோ, ”நான் நல்ல விதமாகத்தான் சொன்னேன், தவறாகக் கூறி இருந்தால் மன்னித்து விடுங்கள்” என்று கேட்டார். ஆனால் ரியோ - சனம் மோதல் முடிவின்றி செல்வது இன்றைய முதல் ப்ரமோவில் தெரிகிறது. அதில் சனம், ”இந்த போன் டாஸ்க்கில் எல்லார்குள்ளேயும் என்ன இருந்துச்சோ அது எல்லாமே பிரேக் ஆகிடுச்சு. முகத்தைப் பார்த்து என்னால குட் மார்னிங் கூட சொல்ல முடியல. அந்த அளவுக்கு நெகட்டிவிட்டி இருக்கு. அப்படியே பிரிஞ்சிடுச்சு” என்று கூறுகிறார்.

அதற்கு ரியோ, ”இந்தப் பிரச்னையைத் தீர்க்க நெறைய எஃபர்ட் போட்டாச்சு.. என்னால முடியல” என்று சொல்ல, அதற்கு அர்ச்சனா, ”நான் 30 நாட்களாக போட்ட எஃபர்ட் நேற்று முன்தினம் தெரிஞ்சிடுச்சி” என்று கூறுகிறார். ”இது எண்ட் பாயிண்ட்னு நெனைச்சிங்கனா, இதுக்குப் பிறகும் ஒபினியன் வரும்” என்றார் ஷனம். அதற்கு ரியோ, ”உங்க எஃபர்ட்க்கு நன்றி ஷனம், ஆனால் இதுகுறித்து பேச எனக்கு சுத்தமா இன்ட்ரஸ்ட் இல்ல” என்று கூறும் காட்சிகள் உள்ளன. இவர்கள் பிரச்னை எப்பதான் முடியும் என ரசிகர்கள் கமென்ட்ஸ் செய்து வருகின்றனர்.





உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: