பிக்பாஸ் 2 : களமிறங்கும் பவர்ஸ்டார், மும்தாஜ்

Sheik Hanifah | news18
Updated: June 13, 2018, 8:54 PM IST
பிக்பாஸ் 2 : களமிறங்கும் பவர்ஸ்டார், மும்தாஜ்
பவர்ஸ்டார் சீனிவாசன் - மும்தாஜ்
Sheik Hanifah | news18
Updated: June 13, 2018, 8:54 PM IST
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பிரபல கவர்ச்சி நடிகை மும்தாஜும், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்தவித வெளியுலக தொடர்புமின்றி , 100 நாட்கள் பிரபலங்கள் ஒரு வீட்டுக்குள் பிரபலங்கள் ஒன்றாக தங்கியிருக்க வேண்டும். அப்படி தங்கியிருப்பவர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். இவ்வாறு கடந்த முறை ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து வரும் ஜுன் 17 - ம் தேதி அன்று பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் கவர்ச்சி நடிகை மும்தாஜ் மற்றும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நடிகை ராய் லட்சுமி கலந்து கொள்வதாக தகவல் வெளியானது . அந்த அறிவிப்புக்கு நடிகை ராய் லட்சுமி மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால் நடிகை மும்தாஜ் இது குறித்து இன்னும் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

மேலும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...