ரோபோ சங்கருக்கு குவியும் பாராட்டு.. ஏன் தெரியுமா ?

ரோபோ சங்கர்

அரசு இல்லங்களில் உள்ள மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க நடிகர் ரோபோ சங்கர் பேசி மகிழ்வித்து வரும் செயலானது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

 • Share this:
  கொரோனா பேரிடரில் உயிர்சேதம் அளவுக்கு முக்கியமான இன்னொருப் பிரச்சனை மனஅழுத்தம். நெருங்கிய உறவுகளை பறி கொடுத்தது, பொருளாதார நெருக்கடி, வெளியே நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்கிப் போயிருப்பது என பல்வேறு காரணங்களால் மனஅழுத்தத்தில் தவிப்பவர்கள் ஏராளம். இதன் விளைவாக குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

  ஜனங்களின் மன அழுத்தத்தை குறைக்க பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் அவர்களிடையே பேசி அவர்களை மகிழ்வித்து வருகிறார். கொரோனா முதல் அலையின் போதே இதனை செய்ய ஆரம்பித்தவர் இப்போதும் அதனை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.  Photos : பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வைரல்

  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மனஅழுத்தத்தைப் போக்க, சிகிச்சை மையங்களுக்கு சென்று அவர்களிடையே பேசிவந்த ரோபோ சங்கர் இப்போது, அரசு இல்லங்களில் உள்ள மாணவர்கள் மத்தியில் பேசி வருகிறார். அவரது நகைச்சுவை மனஅழுத்தத்தில் இருப்பவர்களுக்கு பெரிய ஆறுதலாக உள்ளது என பயன்பெற்றவர்கள் தெரிவித்துள்ளனர். ரோபோ சங்கரின் இந்த நற்செயல்களுக்காக பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: