பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் கொரோனாவால் பாதிப்பு..

பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் கொரோனாவால் பாதிப்பு..

நடிகை பூமி பெட்னேகர்

பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
கொரோனா தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்படும் பாலிவுட் நடிகர்களின் வரிசையில் சமீபத்திய வரவாக நடிகை பூமி பெட்னேகர் இணைந்துள்ளார்.

நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்பை மகாராஷ்டிரா சந்தித்து வருகிறது. கொரோனாவின் 2வது அலை மிகத் தீவிரமாக அங்கு பரவி வருவதன் எதிரொலியாக மும்பையைச் சேர்ந்த பல பாலிவுட் பிரபலங்கள் அடுத்தடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாலிவுட் திரைப் பிரபலங்கள் அக்‌ஷய் குமார், ரன்பீர் கபூர், ஆலியா பட், ஆதித்யா நாராயண், ரூபாலி கங்குலி, கார்திக் ஆர்யன், ஆமிர் கான், விக்கி கவுஷல் என நட்சத்திர பட்டாளமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றால் சமீபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

கொரோனா பாதிப்புக்கு ஆளான பாலிவுட் நட்சத்திரங்களின் வரிசையில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் நடிகை பூமி பெட்னேகர். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். இன்றைய நிலைமையில் எனக்கு சிறிய அளவில் அறிகுறிகள் தெரிகின்றன. ஆனாலும் பரவாயில்லாமல் இருக்கிறேன். மருத்துவர் மற்றும் மருத்துவ அலுவலர்கள் பரிந்துரைத்த விதிகளை கடைப்பிடித்து வருகிறேன். 
View this post on Instagram

 

A post shared by Bhumi 🌻 (@bhumipednekar)


என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த சூழலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதிகபட்ச எச்சரிக்கையை நான் கடைப்பிடித்தும் கூட இந்த வைரஸ் தொற்று என்னை பாதித்துள்ளது. முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். கைகளை கழுவுங்கள். சமூக விலகலை கடைப்பிடியுங்கள் மற்றும் பொதுவான நடவடிக்கைகளில் எச்சரிக்கையாக இருங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடிகைகள் நிவேதா தாமஸ், கவுரி கிஷன் மற்றும் தமிழில் சந்தானம் நடித்த 'சக்கபோடு போடு ராஜா' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான வைபவி சாண்டில்யா ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: