ரோமியா ஜூலியட், போகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவியின் 25-வது படமாக ‘பூமி’ உருவானது. நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது.
விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தில் கூறப்பட்டிருக்கும் புள்ளி விவரங்கள் குறித்த முக்கிய தகவல்களில் பிழை இருப்பதாக சமூகவலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்நிலையில் ‘பூமி’ படத்தைக் குறிப்பிட்ட நெட்டிசன் ஒருவர், இதுவரை நான் பார்த்த படங்களில் ‘பூமி’ போன்ற ஒரு மோசமான படத்தைப் பார்த்ததில்லை. முதலில் இருந்து கடைசி வரை எதுவுமே சரியாக இல்லை. இயக்குநர் லக்ஷ்மண் உடன் சேர்ந்து பணிபுரிவதை நிறுத்துங்கள் ஜெயம் ரவி” என்று எழுதியுள்ளார்.
Sir na eduthathu entha padam pannanum Namma ellarum future generation nallaerrukanamnu nenaichen ungallukaga tha eduthen bro Romeo Juliet edutha ennaku comercial theriyadha nam nadum nattu makkalum nasamai pogattum bro nenga super bro you win I loose https://t.co/NXLFJGHIO7
இதைப்பார்த்த மற்றொருவர் இயக்குநர் உங்களுடைய ட்விட்டர் கணக்கை ப்ளாக் செய்து விடுவார் எனக் குறிப்பிட்டார். உடனே இதற்கு பதிலளித்த இயக்குநர் லக்ஷ்மண் , நம் எதிர்காலத் தலைமுறை நல்லா இருக்க வேண்டும் என நினைத்துதான் இந்தப் படம் எடுத்தேன். உங்களுக்காகத் தான் எடுத்தேன். ரோமியோ ஜூலியட் எடுத்த எனக்கு கமர்ஷியல் தெரியாதா? நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ப்ரோ. நீங்கள் சூப்பர். வெற்றியடைந்துவிட்டீர்கள். நான் தோற்றுவிட்டேன்.” இவ்வாறு இயக்குநர் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.