ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெற்றிமாறன் படத்தில் ஹீரோயினாக பிரபல நடிகரின் தங்கை!

வெற்றிமாறன் படத்தில் ஹீரோயினாக பிரபல நடிகரின் தங்கை!

பவானி ஸ்ரீ

பவானி ஸ்ரீ

இதன் மூலம் வெற்றிமாறன் - இளையராஜா கூட்டணி முதன்முறையாக இணைகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இயக்குநர் வெற்றிமாறனின் அடுத்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ ஹீரோயினாக நடிக்கிறார்.

  தனுஷ் நடித்த 'அசுரன்' படத்தைத் தொடர்ந்து, அடுத்ததாக சூரியை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படபிடிப்பு தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடந்து வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். இதன் மூலம் வெற்றிமாறன் - இளையராஜா கூட்டணி முதன்முறையாக இணைகிறது.

  Bhavani Sre Joins Vetrimaaran's next
  பவானி ஸ்ரீ

  இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஹீரோயினாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடிக்கிறார். இவர் ஏற்கனவே க/பெ ரணசிங்கம் படத்தில், விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்திருந்தார். முன்னதாக, விஜய் சேதுபதி இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இருப்பினும், காடுகளின் தட்ப வெப்பநிலை காரணமாக, படத்திலிருந்து அவர் விலகினார். தற்போது அவருக்கு பதிலாக பாரதிராஜா அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Director vetrimaran