ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

10 ஆண்டு பயணம்.. பாவனா பாலகிருஷ்ணன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவுக்கு குவியும் லைக்ஸ்!

10 ஆண்டு பயணம்.. பாவனா பாலகிருஷ்ணன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவுக்கு குவியும் லைக்ஸ்!

விஜய் டிவி பாவனா

விஜய் டிவி பாவனா

பாவனாவிற்கு திருமண நாள் வாழ்த்துக்களை கமெண்ட்ஸ் மூலம் ர்சிகர்கள் தெரிவித்து வாழ்த்தினர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

சின்னத்திரையில் முன்னணி சேனல்களில் ஒன்றாக இருந்து வரும் ஸ்டார் விஜய் டிவி பல பிரபலங்களை உருவாக்கி உள்ளது. நகைச்சுவை நடிகர்கள், நடிகர்கள், ஹீரோக்கள், மக்களின் மனம் கவர்ந்த ஆங்க்கர்கள் என பலர் விஜய் டிவி-க்கு வந்த பின்னர் வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்வதோடு, மக்கள் மத்தியிலும் மிக பிரபலமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் விஜே பாவனா சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிடித்த மற்றும் புகழ்பெற்ற நபராக இருந்து வருகிறார்.

விஜய் டிவி-யில் தோன்றிய குறுகிய காலத்திற்குள்ளேயே மிகவும் பிரபலமாக மாறியவர் பாவனா பாலகிருஷ்ணன். 1985 மே 22-ல் பிறந்த இவர் டிவி ஆங்கர் , கிரிக்கெட் வர்ணனையாளர் , பின்னணி பாடகர் மற்றும் நடனக் கலைஞர் என பன்முக திறமைகளை வைத்து கொண்டு ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கிறார். ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையை தொடங்கிய பாவனா, முதல் முதலாக ராஜ் டிவி-யில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் என்ற கலகலப்பான ஷோவை தொகுத்து வழங்கினார்.

பின் ஸ்டார் விஜய் டிவியில் சேர்ந்த பாவனா அந்த சேனலின் முழுநேர தொகுப்பாளராக மாறினார். விஜய் டிவி-யில் இவர் முதன் முதலில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர். ஏர்டெல் சூப்பர் சிங்கர் மற்றும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் "ஃபன் அன்லிமிடெட்" உட்பட சேனலின் பிற ஷோக்களை நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கியுள்ளார். ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸ்ட்டாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் சேர்ந்த இவர் ஐ.பி.எல்., உலககோப்பை டி20, சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடர், இவை மட்டுமின்றி ப்ரோ லீக் கால்பந்து, கபடி, வாலிபால் உள்ளிட்ட பல கேம்களை தொகுத்து வழங்கி விளையாட்டு ரசிகர்களின் மனதிலும் தனி இடம்பிடித்து உள்ளார்.

சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் பாவனா விரைவில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 ஷோவை தொகுத்து வழங்க போகிறார். இதனிடையே சமீபத்தில் தனது 10-வது ஆண்டு திருமண நாளை கொண்டாடிய பாவனா, கணவர் நிகில் ரமேஷுடன் எடுத்து கொண்ட போட்டோக்களை ஷேர் செய்து பின்வருமாறு கேப்ஷன் கொடுத்துள்ளார். "இந்த மனிதனை எனது போஸ்ட்களில் நீங்கள் மிகவும் அரிதாகவே பார்த்திருப்பீர்கள்.


ஏனெனில் இவர் சமூக ஊடகங்களை விட்டு ஓடிவிட்டார். இருப்பினும் நான் இவரை 10 ஆண்டுகளாக 'பார்க்கிறேன்' இன்றோடு ஒரு தசாப்தம். என் வாழ்க்கையின் ஒரு பெரிய தருணத்தை பதிவு செய்துள்ளேன். மேலும், இதை மறக்கமுடியாத சில பிளாக் அவுட்களுடன்.. வார விடுமுறையாக மாற்றிய வேடிக்கையான நண்பர்கள் மற்றும் கடவுளுக்கு நன்றி" என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாவனாவிற்கு திருமண நாள் வாழ்த்துக்களை கமெண்ட்ஸ் மூலம் தெரிவித்து வாழ்த்தினர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Vijay tv