உலகத் தமிழர்கள் வாழ்த்துச் சொல்ல வேண்டும் - மணிரத்னம் பிறந்தநாளுக்காக பாரதிராஜா வெளியிட்ட வீடியோ
இயக்குநர் மணிரத்னத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ளார் பாரதிராஜா.

பாரதிராஜா | மணிரத்னம்
- News18 Tamil
- Last Updated: June 2, 2020, 5:31 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் இன்று தனது 64-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது படைப்புகளால் உயர்ந்து நிற்கும் அவருக்கு வாழ்த்துச் சொல்ல ரசிகர்கள் #HappyBirthdayManiRatnam என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர்.
அவருடன் பணியாற்றிய திரைபிரபலங்கள் தொடங்கி இன்று இருக்கும் புதுமுக நடிகர்கள் வரை பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வரும் நிலையில் இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பெருமையாக பேச வேண்டும் என்றால் அது மணிரத்னம் தான். சினிமா வரலாற்றில் மகத்தான கலைஞனை தமிழகம் ஈன்றெடுத்ததற்காக தமிழுக்கும் பெருமை, தமிழ் மண்ணுக்கும் பெருமை.
அந்தக் கலைஞன் உலகளாவிய தன்னுடைய திறமையைக் காட்டி இந்தத் திரைத்துறையிலேயே மிகப் பெரிய சாதனைகளை படைக்க இருக்கின்ற மனிதர். அவருடைய பிறந்தநாளில் உலகத் தமிழர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக் கூற வேண்டும். என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைக் கூறுகிறேன். வாழ்க. தமிழுக்கும், தமிழர் கலைக்கும், திரையுலகுக்கும் அவர் தனிமுத்திரை பதிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also see:

#HappyBirthdayManiRatnam Every Frame u did a magic mani....proud of indian cinema pic.twitter.com/zTJ39VwHLl
— Bharathiraja (@offBharathiraja) June 2, 2020
Also see: