இளையராஜாவுக்காக அனைத்து படைப்பாளிகளும் ஒன்று கூடுங்கள் என்று இயக்குநர் பாரதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தனது பணிகளுக்காக பிரசாத் ஸ்டுடியோவின் ஒரு கட்டடத்தை பல வருடங்களாகப் பயன்படுத்தி வருகிறார். சமீபகாலமாக அந்தக் கட்டடம் தொடர்பாக இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோவின் நிர்வாகத்துக்கும் இடையே பிரச்னை மூண்டுள்ளது. இதனால் இளையராஜாவின் திரைப்பட ஒலிப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தவிவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் இயக்குநர் பாரதிராஜா, “அரை நூற்றாண்டு கடந்து தமிழ் சினிமாவை இன்றும் தன் இசையால் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை தொடர்ந்து தன்வசப்படுத்திக் கொண்டிருக்கும் இளையராஜாவுக்கும்,பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரசாத் ஒலிப்பதிவு கூடத்தில் இளையராஜாவின் திரைப்பட ஒலிப்பதிவு வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இது மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வாகும்.
ஆகையால் மீண்டும் இசைப்பணிகளை அங்கு தொடர்ந்திட, பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் சுமுகமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் விதமாக அனைத்து படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் 28.11.2019
வரும் வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோவில் ஒன்றுகூடுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.