அசுரன் பட வெற்றியை அடுத்து ‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜி படத்தின் ஒரு கதையை இயக்கிய வெற்றிமாறன், சூர்யாவின் வாடிவாசல், சூரி நாயகனாக நடிக்கும் படம், அதை அடுத்து மீண்டும் தனுஷ் உடன் கூட்டணி என பிஸியாகியுள்ளார். இதனிடையே நடிகர் விஜய்க்கு கதை ஒன்றை தயார் செய்து வருவதாகவும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இதில் முதலாவதாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை கையிலெடுத்திருக்கிறார் வெற்றிமாறன். இந்தப் படத்துக்காக நடிகர் சூரி சிக்ஸ் பேக் வைத்து தனது உடலமைப்பை மாற்றியிருந்தார். பூமணியின் ‘வெக்கை’ நாவலை அசுரன் என்ற திரைப்படமாக்கிய வெற்றிமாறன் இந்தமுறை ஜெயமோகனின் ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி சூரி நடிக்கும் திரைப்படத்தை இயக்குகிறார். மேலும் இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுகிறார் வெற்றிமாறன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருவதாகவும், இளையராஜா 8 பாடல்களை முடித்துக் கொடுத் திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாரதிராஜா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் உடல்நிலை காரணங்களுக்காக படத்திலிருந்து விலகியுள்ளார். அவர் நடிக்க வேண்டிய கேரக்டரில் நடிகர் கிஷோர் நடிக்க உள்ளார்.
வெற்றிமாறன் - சூரி கூட்டணியில் உருவாகி வரும் படத்துக்கு ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ஒரே மாதத்தில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.