ஜோதிகா நடிப்பில் வெளியாகி உள்ள பொன்மகள் வந்தாள் படத்தை வியந்து பாராட்டியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள். மேலும் இந்தப் படத்தில் பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன், பார்த்திபன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
கோவிந்த வசந்தா இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் சூழ்நிலையில் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது பொன்மகள் வந்தாள் திரைப்படம்.
இந்நிலையில் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்துவிட்டு ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள இயக்குநர் பாரதிராஜா, “அரியாத வயதில் காமத்தை சுமந்து, வெளியில் சொல்லா முடியாமல் வாழும், பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல, பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம்..
இயக்குனரின் இயக்கமும்,ஜோதிகாவின் உணர்ச்சி சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள் கண்களை கலங்கடித்து விட்டது. இந்த ‘பொன்மகள் வந்தாள்’கண்டிப்பாக சமூகத்தை கலங்கடிக்கும்.” என்று கூறியுள்ளார்.
அரியாத வயதில் காமத்தை சுமந்து,வெளியில் சொல்லா முடியா வாழும்,பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல,பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம்.. இயக்குனரின் இயக்கமும்,ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள்
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.