Bharathi Kannamma: கண்ணம்மாவை காப்பாற்றிய பாரதி!

பாரதி கண்ணம்மா சீரியல்

கண்ணம்மாவை மருத்துவமனையில் பரிசோதித்த பாரதி அவளது நுரையீரல் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போகிறான்.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    வெண்பாவின் சதியால் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து 8 ஆண்டுகளாகி விட்டன. கண்ணாம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் ஒன்று அவளிடமும், மற்றொன்று அவளது மாமியார் செளந்தர்யாவிடமும் வளர்கிறது. இந்த உண்மை கண்ணம்மாவுக்கும், பாரதிக்கும் தெரியாது.

    வேதிகாவின் ஸ்டன்னிங் படங்கள்!

    தனது குழந்தை லட்சுமியை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கிராமத்தில் இருந்து மீண்டும் சென்னைக்கு வருகிறாள் கண்ணம்மா. தனது மாமியார் வீட்டினர் கண்களில் பட்டு விடக்கூடாது என்பதிலும் அவள் கவனமாக இருக்கிறாள். இதற்கிடையே ஒரு பள்ளியில் அவளுக்கு மதிய உணவு சப்ளை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. அங்கு தான் கண்ணம்மாவின் இன்னொரு மகள் ஹேமா படிக்கிறாள்.

    கண்ணம்மாவுக்கு வெண்பா போட்ட விஷ ஊசியால், அவ்வப்போது அவளுக்கு மயக்கம் வருகிறது. இதற்கிடையே துளசியுடன் நடந்து போய்க்கொண்டிக்கும் போது திடீரென மயங்கி விழுகிறாள் கண்ணம்மா. அப்போது காரில் வரும் பாரதியை வழி மறைத்து மருத்துவமனைக்கு போக உதவி செய்யும்படி துளசி கேட்கிறாள். கண்ணம்மாவை மருத்துவமனையில் பரிசோதித்த பாரதி அவளது நுரையீரல் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போகிறான். ’உன் மேல எவ்வளவு அன்பு வச்சிருந்தேன். எல்லாத்தையும் இப்படி கெடுத்துக்கிட்டியே’ என மயக்கமாக இருக்கும் கண்ணம்மாவிடம் கேட்கிறான்.

    உடனடியாக கிசிச்சையளிக்க வேண்டும் எனவும் அதற்கு ஒரு ஊசி வாங்க 80,000 செலவாகும் எனவும் துளசியிடம் கூறுகிறாள். பணத்தை தயார் செய்ய முடியாத துளசி, கண்ணம்மா உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என பாரதியிடம் கெஞ்சுகிறாள்.

    பின்னர் தனது கார்டை எடுத்து துளசியிடம் கொடுக்கும் பாரதி, அந்த ஊசியை வாங்கி வர சொல்கிறான். ஒரு வழியாக கண்ணம்மாவுக்கும் உடல்நிலை சரியாகி விட்டது. டிஸ்சார்ஜ் ஆகி செல்கையில் எல்லா பணத்தையும் பாரதியே செலுத்தி விட்டதால், 2000 மட்டும் படி மருத்துவமனை தரப்பில் சொல்கிறார்கள். உள்ளுக்குள் ஒருத்தருக்கொருத்தர் இவ்வளவு அன்பை வைத்துக் கொண்டு, இப்படி பிடிவாதம் பிடிக்கிறார்களே என தனக்குள் நினைத்துக் கொள்கிறாள் துளசி.

    Vadivelu: காமெடி நடிகர்களுடன் வடிவேலு – வைரலாகும் படம்!

    மறுபுறம் மாமியார் வீட்டில் இருந்த கண்ணம்மாவின் படம் கீழே விழுந்து கண்ணாடி உடைந்து விடுகிறது. இதனால் கண்ணம்மாவுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என தவித்துப் போகிறார் மாமியார் செளந்தர்யா. குணமாகி வீடு திரும்பிய கண்ணம்மாவை மீண்டும் சந்திப்பானா பாரதி? தன்னைக் காப்பாற்றியது பாரதி தான் எனத் தெரிய வந்தால் என்ன செய்வாள் கண்ணம்மா... பொறுத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: