பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்த டிவிஸ்ட் - வெண்பாவின் திட்டம் என்ன?

வெண்பா

ஒரு கட்டத்தில் இதனை பார்த்து கடுப்பான பாரதி தனது மகளை கூட்டிக்கொண்டு அமெரிக்கா செல்ல திட்டமிடுகிறார்.

 • Share this:
  ஸ்டார் விஜய் டிவி-யில் ரசிகர்களின் பேராதரவு பெற்ற சீரியல்களில் மிக முக்கியான சீரியல் பாரதி கண்ணம்மா. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தாலும், இந்த சீரியல் ஹீரோயினான கண்ணம்மா வயிற்றில் குழந்தைகளுடன் பல கிலோ மீட்டர்கள் நடையாய் நடந்து சென்ற சீன்கள் சோஷியல் மீடியாவில் மீம்ஸாக ஷேர் செய்யப்பட்டு வைரலானது.

  இதனை அடுத்தே அதுவரை இந்த சீரியலை பார்க்காமல் இருந்த சின்னத்திரை ரசிகர்கள் கூட, அதன் பிறகு பாரதி கண்ணம்மா சீரியலை தற்போது வரை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். விஜய் டிவி சீரியல்களில் டிஆர்பி ரேடிங்கில் உச்சத்தில் இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல் தான்.

  இந்த சீரியலில் பாரதியாக நடிகர் அருண் பிரசாத், கண்ணம்மாவாக நடிகை ரோஷினி ஹரிபிரியன் தாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். வில்லியான வெண்பா கதாபாத்திரத்தில் ஃபரினாவும் நடித்து வருகின்றனர். இந்த கதையில் கண்ணம்மாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவுக்கு வெண்பா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறது.

  ALSO READ |  ஹனிமூனுக்கு பதில் ஷுட்டிங்கிற்கு சென்ற சினேகன்-கன்னிகா ரவி!

  இந்த சீரியலில் பாரதியை எப்படியாவது திருமணம் செய்தே தீரவேண்டும் என்ற ஆசையில், பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே களங்கத்தை மூட்டி விடுவதில் இருந்து அதற்கு இடையூறாக யார் வந்தாலும் அதை தடுப்பது வரை அனைத்து வேலைகளையும் பார்க்கும் கொடூர கதாபாத்திரத்தில் செமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் ஃபரினா.  அவளின் சூழ்ச்சிகளை அறியாத பாரதி, தொடர்ந்து நம்பிக்கொண்டிருக்கிறான். தனக்கு இரட்டை குழந்தை பிறந்தது கூட தெரியாமல் இருக்கும் பாரதி, அதில் ஒரு குழந்தையை, தத்தெடுத்து வந்த குழந்தைபோல் நினைத்துக் கொண்டு வீட்டிலேயே வளர்க்கிறான். அந்த பெண் படிக்கும் பள்ளியில் கண்ணம்மா சமையல் வேலை செய்த நிலையில் அவர் மீது பாரதி வளர்க்கும் பெண் பிள்ளைக்கு பாசம் ஏற்படுகிறது.

  ALSO READ |  பிக்பாஸ் சீசன் 5 பார்க்கத் தயாரா? - ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புதிய தகவல்கள்!

  ஒரு கட்டத்தில் இதனை பார்த்து கடுப்பான பாரதி தனது மகளை கூட்டிக்கொண்டு அமெரிக்கா செல்ல திட்டமிடுகிறார். இதனால் அவரது மகளுக்கு உடல்நிலை மோசமாக மருத்துவர் அவர் பாசம் வைத்திருக்கும் சமையல் அம்மாவான கண்ணம்மா தான் இதற்கான மருந்து என கூறிவிடுகிறார்.  இதனை சற்றும் எதிர்பாராத பாரதி தற்போது தனது மகளை கண்ணம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் அடிக்கடி அங்கு சென்றும் வருகிறார். இந்த விஷயத்தை அறிந்த வெண்பா, பாரதியிடம் சண்டை போடுகிறார். அதற்கு பாரதி உன்னிடம் எதற்கு நான் அனைத்தையும் கூற வேண்டும்? இது என்னுடைய வாழ்க்கை என கோபமாக பேசுகிறார்.

  ALSO READ |  நீச்சல் குளத்தில் கர்ப்பகால போட்டோஷூட் செய்த ஃபரீனா - வைரலாகும் புகைப்படங்கள்

  இந்த நிலையில் தற்போது படப்படிப்பு தளத்தில் இருந்து வெளியான வீடியோ ஒன்றில் வெண்பாவை வேலைக்காரியை கட்டிவைத்திருக்கிறார்கள். அருகில் நிற்கும் வெண்பா கையில் கட்டையுடன் நின்று கொண்டு எப்படி அடிப்பது என பயிற்சி பெற்று கொண்டிருக்கிறார்.

      
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)


  கலகலப்புடன் காட்சிகள் படமாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஆனால் வெண்பாவின் வீட்டில் வேலை பார்க்கும் பெண் அவருடன் சேர்த்து எப்போதும் திட்டம் தீட்டும் நிலையில் அவரையே ஏன் வெண்பா கட்டி வைத்திருக்கிறார்? என்ன நடக்கபோடுகிறது என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: