என்ன வேணும்ன்னாலும் சொல்லிக்கோங்க, டெலீட் பண்ண மாட்டேன்... பாத்டப்பில் வெண்பா!

பரீனா

தான் பாத் டப்பில் இருக்கும்படி ஃபோட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அதன் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஃபரீனா.

 • Share this:
  கர்ப்பமாக இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வெண்பா பாத் டப்பில் இருக்கும் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

  தொகுப்பாளினியாக இருந்து சீரியல் நடிகையானவர் ஃபரீனா ஆசாத். இவர் தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ’பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். திருமணமான பாரதியை எப்படியாவது அடைந்தே தீர வேண்டுமென பல வில்லத்தனங்களை செய்து வரும் வெண்பா கதாபாத்திரம், பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.   
  View this post on Instagram

   

  A post shared by farina azad (@farina_azad_official)


  வெண்பாவின் சூழ்ச்சியால் தான் பாரதியும், கண்ணம்மாவும் 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இரட்டை குழந்தையைப் பெற்றெடுத்த கண்ணம்மாவின் குழந்தைகளும் தனித்தனியே வளர்கிறார்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஃபரீனா. 4 வருடங்கள் கழித்து தான் கர்ப்பமாக இருப்பதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார். அதோடு சமீபத்தில் தனது வயிற்றில் மருதாணி வைத்து வித்யாசமான போட்டோ ஷூட்டையும் நடத்தி இருந்தார். அதை சிலர் விமர்சிக்கவும் செய்திருந்தனர்.   
  View this post on Instagram

   

  A post shared by farina azad (@farina_azad_official)


  இந்நிலையில் தற்போது தான் பாத் டப்பில் இருக்கும்படி ஃபோட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அதன் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், ”கர்ப்ப காலத்தில் குளியல் தொட்டி மிகவும் பாதுகாப்பானது! அசாதாரண போஸ்ட்டை பார்க்கும்போது, மக்கள் எதிர்மறையைப் பரப்பி எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள். அதற்கு எந்த பதிலும் கொடுப்பதில்லை. மேலும் எதையும் நீக்குவதும் இல்லை. 'அவர்கள் யார்' மற்றும் அவர்கள் எவ்வளவு பைத்தியக்காரத்தனமான குறுகியவர்கள் என்பதை தெரியப்படுத்துங்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: