Vishal: விஷால் படத்தில் பாரதி கண்ணம்மா நடிகர் - வெளியான புகைப்படம்!

அகிலன் மற்றும் விஷால்

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொடராக உள்ள பாரதி கண்ணம்மா சீரியல், விஜய் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது.

  • Share this:
பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் அகிலன், விஷால் - யோகிபாபு ஆகியோர் நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொடராக உள்ள பாரதி கண்ணம்மா சீரியல், விஜய் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. 2 ஆண்டுகளைக் கடந்துள்ள இந்த தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் கதைக்களம் நகர்ந்து வருகிறது. ’கருத்தமுத்து’ என்ற மலையாள தொடரின் மறுஆக்கமாக இந்த சீரியல் உருவாக்கப்பட்டு, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்ககும் பாரதி கண்ணம்மா தொடரில் மேயாத மான் திரைப்படத்தில் நடித்த அருண் பிரசாத் ஹீரோவாக நடிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரோஷினி ஹிரிப்பிரியன் கண்ணம்மாவாகவும், நடிகை சுவீட்டி அஞ்சலியாக நடிக்கிறார். பாரதியின் தம்பியாக அகிலன் நடிக்கிறார். தனி டிராக்கில் செல்லும் அகிலன் - அஞ்சலி ஜோடியின் ரொமான்ஸூம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. சீரியலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அகிலனுக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. விஷால் நடிப்பில் உருவாகி வரும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் யோகிபாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அவர்களுடன் இந்தப் படத்தில் இணைந்து அகிலனும் நடிக்க உள்ளார்.

இதற்கான அறிவிப்பை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அகிலன் தெரிவித்துள்ளார். மருத்துவமனை ஒன்றில் விஷால், யோகிபாபுவுடன் அமர்ந்திருக்கும் அகிலன், தன்னுடைய வெள்ளித்திரை பயணம் பற்றிய அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அவருக்கு சக பாரதி கண்ணம்மா நடிகர், நடிகைகள் மற்றும் சின்னத்திரை நண்பர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ரசிகர்களும் அகிலனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.



 




View this post on Instagram





 

A post shared by Akilan SPR (@akilan.spr)






விஷாலின் 31வது படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் பா.சரவணன் படத்தை இயக்குகிறார். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தியும், அகிலனுக்கு ஜோடியாக ரவீனாவும் நடிக்க உள்ளனர். விஷால் படம் மட்டுமில்லாமல் பிரபல நடன இயக்குநர் பிரபுதேவாவின் 'பஹீரா' படத்திலும் அகிலன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பஹீரா திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

Also read... Nayanthara: இரு புதிய படங்களில் நடிக்கும் நயன்தாரா...!

ஏற்கனவே அன்பானவன் அசராதவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், பஹீரா படத்தில் நடிகைகள் பட்டாளத்தையே இறக்கியுள்ளார். பிரபுதேவாவுடன் இணைந்து சோனியா அகர்வால், சஞ்சிதா ஷெட்டி, அமைரா தஸ்தூர், ஜனனி, சாக்ஷி அகர்வால், ரம்யா நம்பீசன், காயத்திரி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சைக்கோ திரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. எதிர்பார்த்ததுபோலவே கவர்ச்சி அதிகமாக உள்ளது. இளைஞர்களை குறிவைத்து உருவாகியிருக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அகிலனின் கதாப்பாத்திரம் சஸ்பென்ஸாக இருக்கிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: