Home /News /entertainment /

Bharathi Kannamma வெண்பாவின் மகனை பார்த்திருக்கீங்களா..? க்யூட்டான பேமிலி போட்டோ இதோ!

Bharathi Kannamma வெண்பாவின் மகனை பார்த்திருக்கீங்களா..? க்யூட்டான பேமிலி போட்டோ இதோ!

Farina Azad

Farina Azad

Farina Azad | விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு அதில் வில்லி வெண்பாவாக நடித்து வரும் ஃபரீனாவின் பங்களிப்பு முக்கியமானது. பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு உள்ள ஒட்டுமொத்த ரசிகர்கள் பட்டாளமும் திட்டித்தீர்க்கும் அளவிற்கு வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் ஃபரீனா நடிப்பில் வெளுத்து வாங்கி வருகிறார்.

மேலும் படிக்கவும் ...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களின் நீண்ட கால ஆதரவை பெற்று வருகிறது ‘பாரதி கண்ணம்மா’. சீரியல்கள் ஹிட்டடிக்க சரியான ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் வில்லன் அல்லது வில்லி பாத்திரங்கள். சூப்பர் ஹிட்டாகும் எல்லா சீரியல்களிலும் வில்லி பாத்திரங்கள் மற்றும் அதில் நடிக்கும் நடிகைகள் சிறப்பாக நடித்திருப்பார்கள்.

அந்த வகையில், விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு அதில் வில்லி வெண்பாவாக நடித்து வரும் ஃபரீனாவின் பங்களிப்பு முக்கியமானது. பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு உள்ள ஒட்டுமொத்த ரசிகர்கள் பட்டாளமும் திட்டித்தீர்க்கும் அளவிற்கு வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் ஃபரீனா நடிப்பில் வெளுத்து வாங்கி வருகிறார். பாரதி - கண்ணம்மாவை நிரந்தரமாக பிரித்து வைக்க தன்னால் ஆன எல்லா சித்து வேலைகளையும் செய்து ரசிகர்களிடம் திட்டு வாங்கி வருகிறார்.

எப்பய்யா சீரியலை முடிப்பீங்க என ரசிகர்கள் கதறிக்கொண்டிருந்த நிலையில், பாரதி கண்ணம்மாவிற்கு வலுசேர்க்கும் வகையில் ரேகா கதாபாத்திரத்தை இறங்கியுள்ளனர். ரேகா, வெண்பாவின் அம்மாவாக வந்து பாரதியை அலறவைத்து வருகிறார். அவரிடம் சிக்கிக் கொண்டு மகள் வெண்பாவே படாதபாடுபடுகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பாரதி கண்ணம்மா சீரியல் வில்லியாக மட்டுமல்ல சொந்த வாழ்க்கை தொடர்பாக சில சமயங்களில் ஃபரீனா சர்ச்சையில் சிக்குவது உண்டு. சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஃபரீனா தனது கர்ப்பம் முதல் பிரசவம், பெயர் சூட்டு விழா என அனைத்தையுமே ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். வழக்கமாக கர்ப்ப காலத்தில் எல்லா நடிகைகளும் செய்வது போல் ஃபரீனாவும் Prgenancy போட்டோ ஷூட் நடத்தினார். ஆனால் கர்ப்ப கால வயிற்றை முழுவதும் எக்ஸ்போஸ் செய்ததோடு, அதில் மெகந்தி வேறு வரைந்திருந்தது ரசிகர்களை கோபப்படுத்தியது.



இதனால் ரசிகர்கள் ஃபரீனாவை சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கினர். “வெண்பாவாக நடிச்சதுக்கு வாங்காத திட்டா... போங்கா பாஸ்” என தேவையற்ற கமெண்ட்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஃபரீனா தொடர்ந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். கர்ப்ப காலத்தில் கூட சீரியலை விட்டு விலகாத ஃபரீனா, அழகிய ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். பின்னர் சிறிய பிரேக்கிற்கு பிறகு மீண்டும் சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Also Read : சீரியல் நடிகையின் குடும்ப நிகழ்ச்சியில் அப்பவே கலந்து கொண்ட பாரதி கண்ணம்மா நடிகர்! காதல் வதந்தி உண்மை தானா?

சோசியல் மீடியாவில் என்ன தான் ஆக்டிவாக இருந்தாலும், மகன் விஷயத்தில் ஃபரீனா உஷாராக செயல்பட்டு வருகிறார். இதுவரை மகனின் ஒரு சில புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டுள்ள ஃபரீனா, தற்போது தனது மகன், கணவருடன் வெளியே செல்லும் போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Also Read : Cooku with Comali பிரபலங்கள் இருவரின் காம்போவில் உருவாகும் புதிய திரைப்படம் - ரசிகர்கள் ஆவல்!

க்யூட் லுக்கில் குடும்பமே ஹேப்பி மூடில் இருக்கும் இந்த போட்டோ சோசியல் மீடியாவை ஒரு கலக்கு கலக்கி வருகிறது. வெண்பாவாக ஃபரீனாவை திட்டித்தீர்த்த பலரும் கூட, அவருடைய அழகான மகன் போட்டோவிற்கு தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
Published by:Selvi M
First published:

Tags: Entertainment, TV actress

அடுத்த செய்தி