• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கண்ணம்மா.. என்னம்மா இது... நடிகை ரோஷினி சேட்டை...!

கண்ணம்மா.. என்னம்மா இது... நடிகை ரோஷினி சேட்டை...!

ரோஷ்னி ஹரிபிரியன்

ரோஷ்னி ஹரிபிரியன்

சின்னக்குழந்தையில் இருந்து இதுபோன்ற சேட்டைகள் செய்ய வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை, இது எனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் ரோஷினி தெரிவித்துள்ளார்.

  • Share this:
விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஒவ்வொரு எபிசோடும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. பாரதி - கண்ணம்மா எப்போது சேரப்போகிறார்கள், ஹேமா தங்களுடைய குழந்தை என அவர்கள் இருவருக்கும் எப்போது தெரியப் போகிறது என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதற்கிடையே, வெண்பா போடும் ஒவ்வொரு சதியும் அவளுக்கு வெற்றியாக இருப்பதால் நாடகம் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. நாடகத்தில் பரபரப்பு என்றால், நிஜ வாழ்க்கையிலும் அப்படி இருக்க வேண்டுமா என்ன? என்று கேட்கும் வகையில், கண்ணம்மா வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ரோஷினி ஹரிப்பிரியன் இந்த தொடரில் லீட் ரோலில் நடித்து வருகிறார். சூட்டிங்கிற்கு இடையே கிடைத்த ஜாலி டைம்மில் வெளியே சென்ற ரோஷினி, நண்பர்களுடன் ஹேப்பியாக டைம்மை கழித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். 
View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)


இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், வடிவேலுவின் பிரபல காமெடியான ‘அந்த நாள் முதல் இந்த நாள் வரை’ காமெடிக்கு ஏற்ப, மால்களில் இருக்கும் பொருட்களை கொண்டு செல்வதற்காக கொடுக்கப்படும் வண்டியில் அமர்ந்து சேட்டை செய்துள்ளார்.

Also read... கிளாசிக் to கிளாமர்: ஆயிஷாவின் அசத்தல் புகைப்படங்கள்!

’நான் ரொம்ப நாணயமானவ, அதனால வண்டிய திரும்ப கொடுத்துட்டேன், என்னப்போலவே மத்தவங்களுக்கு மாசக்கணக்கா வண்டிய கொடுக்காத’ என வடிவேலுவின் டையால்லுக்கு ரோஷினி கொடுக்கும் எக்ஸ்பிரசன்ஸ் அழகாக இருக்கிறது. மேலும், இந்த வீடியோவை பதிவிட்டு, அதற்கு எழுதியுள்ள கேப்சனில், சின்னக்குழந்தையில் இருந்து இதுபோன்ற சேட்டைகள் செய்ய வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை, இது எனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் ரோஷினி தெரிவித்துள்ளார். கண்ணம்மாவா இப்படி சேட்டை செய்வது என ரசிகர்கள் ஜாலியாக அந்த வீடியோவுக்கு லைக்குகளை கொடுத்து வருகின்றனர்.

இதனிடையே, பாரதி கண்ணம்மா சீரியலில் லக்ஷமியின் அம்மா கண்ணம்மா என எழுதியிருப்பதை பார்த்து பாரதி பார்த்து விடுகிறான். இதுநாள் வரை கண்ணம்மாவைப் விட்டு பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பாரதிக்கு தன்னுடைய முதல் குழந்தை எது என தெரியாது. இடையே எடுக்கப்பட்ட டி.என்.ஏ டெஸ்டுகளையும் வில்லி வெண்பா, கரெக்டாக சூட்சம் செய்து மாற்றி வைத்துவிடுகிறாள். ஹேமாவும், லக்ஷ்மியும் ஒரே பள்ளியில் படித்தாலும், தாங்கள் இருவரும் சகோதரிகள் என தெரியாமல் இருவரும் நெருங்கி பழகிக்கொண்டிருக்கின்றனர். கண்ணம்மாவும், தன்னுடைய குழந்தை தான் ஹேமா எனத் தெரியாமல் அவள் மீது பாச மழை பொழிகிறாள். இந்த நேரத்தில் லக்ஷமியின் அம்மா ‘கண்ணம்மா’ என்பதை பார்த்து பாரதி அதிர்ச்சியடைவதால், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

சீரியல் விறுவிறுப்பாக நகர்வதைப் பார்தால் விரைவில் முடிவுரையை எழுதிவிடுவார்களோ எனவும் ரசிகர்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர். ஏனென்றால், ஆகஸ்டு 14 ஆம் தேதியுடன் ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் முடிவுக்கு வருகிறது. அதற்கு அடுத்த வரிசையில் பாரதி கண்ணம்மாவும் இடம்பெற வாய்ப்புள்ளதாக கருதுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: