• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கண்ணம்மாவிடம் உண்மையை சொல்லிய மாமியார்.. அடுத்து நடக்கபோவது என்ன?

கண்ணம்மாவிடம் உண்மையை சொல்லிய மாமியார்.. அடுத்து நடக்கபோவது என்ன?

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் அடுத்தடுத்த டிவிஸ்டுகளால் ரசிகர்களை திணறடித்து வருகிறது. மனவருத்தம் காரணமாக பிரிந்து இருக்கும் பாரதியும், கண்ணாம்மாவும் அண்மைக்காலமாக மீண்டும் சேர்ந்து பயணிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது வெண்பாவுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் இருவரும் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருக்கும் வெண்பா, அதற்கான சூழ்ச்சிகளை விடாமல் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். அதேநேரத்தில், வெண்பாவின் சூழ்ச்சியில் சிக்கி கண்ணம்மாவை வெளியில் அனுப்பிய பாரதி, இப்போது தவறு செய்துவிட்டோமோ? என வருந்துகிறான்.

கண்ணம்மாவை கஷ்டப்படுத்தி, அவளை வீட்டை விட்டு அனுபியது தவறு என எண்ணுகிறான். இதனால், அவளுடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்படும் அவன், தன் அம்மாவிடம் இதை தெரிவிக்கிறான். இது சௌந்தர்யாவுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஏனென்றால், பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் மனம் வருத்தம் ஏற்பட்டு பிரிந்ததில் இருந்து, கண்ணம்மாவின் பக்கமே இருந்தார் சவுந்தர்யா. பாரதி தவறு செய்கிறான் என்பதையும் நன்கு அறிந்திருந்தார். கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை பிறந்ததை கேள்விப்பட்ட சவுந்தர்யா, மருத்துவமனைக்கு நேரில் சென்று அவளுக்கு தெரியாமல் ஒரு குழந்தை எடுத்துக்கொண்டு வந்து தானே வீட்டில் வளர்த்தார்.

பாரதியும், ஹேமா தன்னுடைய மகள் என்பதை அறியாமல் அவள் மீது பாசமழை பொழிந்து வளர்த்தான். கண்ணம்மாவும், தனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை என லட்சுமியை வளர்த்து வந்தாள். ஆனால், தனக்கு இன்னொரு குழந்தை இருப்பதை வெண்பா மூலம் அறிந்து கொண்ட கண்ணம்மா, இன்னொரு குழந்தையை தெரிந்து கொள்ளவதற்காக பாரதியுடன் டைவர்ஸ் செய்யவும் தயாராகிறாள். டைவர்ஸ் விளையாட்டை பாரதிக்கு தெரியாமல், வெண்பாவே அரங்கேற்றுகிறாள்.

இந்நிலையில், லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் புரோமோவில், வெண்பா கண்ணம்மாவின் வீட்டிற்கு நேரடியாக செல்கிறாள். அப்போது, உன்னுடைய 2வது குழந்தை யார் என தெரிய வேண்டுமானால், நீ டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்துபோட வேண்டும் என கூறுகிறாள். இதற்கு கண்ணம்மா சம்மதிக்கிறார். அப்போது, கண்ணம்மாவின் வீட்டிற்கு வரும் மாமியார் சவுந்தர்யா, கண்ணம்மாவின் கையில் இருக்கும் டைவர்ஸ் பேப்பரை வாங்கிப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். எதற்காக இப்படி செய்கிறாய் என்று கேட்கும்போது, எனக்கு 2 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள்.


இன்னொரு குழந்தை எங்கிருக்கிறது என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால், டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போடுகிறேன் என கண்ணம்மா கூறி கதறியழுகிறாள். அவளின் கண்ணீரைப் பார்த்த மாமியார் சவுந்தர்யா, இவ்வளவு நாட்கள் மறைத்து வைத்திருந்த உண்மையை போட்டுடைத்துவிட்டாள். அதாவது, தான் வளர்ப்பு மகளாக வளர்த்து வரும் ஹேமா தான் இன்னொரு மகள் என்ற சீக்கரெட்ஸை கூறிவிடுகிறாள். இதனால் அதிர்ச்சிசயடையும் கண்ணம்மா, கண்ணீர்விட்டு கதறியழுகிறாள். இந்த புரோமோவைப் பார்த்த ரசிகர்கள், பாரதி கண்ணம்மாவில் அடுத்த என்ன டிவிஸ்ட் என எதிர்பார்ப்பின் உச்சத்துக்கே சென்றுள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: