Bharathi Kannamma Serial : பாரதி கண்ணம்மா சீரியலின் அடுத்த ட்விஸ்ட்.. வைரலாகும் புகைப்படம்!

பாரதி கண்ணம்மா

சீரியல் பிரியர்களின் லிஸ்டில் முதலில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் பற்றி அடுத்த அப்டேட் ஒன்று வெளியாகிவுள்ளது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான பாரதி கண்ணம்மா கடந்த ஒரு வாரமாக ரசிகர்களுக்கு ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்து வருகிறது. கண்ணம்மாவை பார்த்தாலே எப்போதும் கோபத்துடனும், ஆத்திரத்துடனும் இருக்கும் பாரதி தன் மகளுக்காக கண்ணம்மாவிடம் கனிவோடு பேசும் காட்சிகளால் ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர். கடந்த வாரம் ஒளிபரப்பான எபிசோட்டில், தனது சொந்த மகள் என்று தெரியாமலேயே ஹேமாவை வளர்த்து வரும் பாரதி, அவரை அமெரிக்கா கூட்டிச் செல்ல திட்டமிடுகிறார்.

இதற்கு குடும்ப உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் அதை கண்டுகொள்ளாமல், ஹேமாவை அமெரிக்கா கூட்டிச்செல்வதில் விடாப்பிடியாக பாரதி இருக்கிறார். குழந்தை ஹேமாவுக்கும் அமெரிக்கா செல்வதில் விருப்பமில்லை. ஆனால், பாரதியின் கட்டாயத்தின்பேரில் அமெரிக்கா புறப்படுகின்றனர். விமான நிலையத்துக்கு செல்லும் வழியில், ஹேமாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கிறது. காரில் சென்று கொண்டிருக்கும்போது ஹேமாவுக்கு வலிப்பு ஏற்படுகிறது. அப்போது அவர்களுடன் கூடவே இருக்கும் மருத்துவ தோழி பிரியா, ஹேமாவின் பல்ஸை செக் செய்து, பல்ஸ் வேகமாக குறைந்து வருவதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும் கூறுகிறார்.

இறுதியில், ஹேமாவை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே வரும் மருத்துவர் பிரியா, ஹேமாவைக் காப்பாற்ற வேண்டும் என்றால் ஒரே ஒரு வழி தான் இருக்கிறது என பாரதியிடம் கூறுகிறார். இதனைக் கேட்ட பாரதி, என்ன செய்ய வேண்டும் என கேட்கும்போது, 'சமையல் அம்மாவை அழைத்து வரவேண்டும்' என பிரியா கூறுகிறார். இதனை தொடர்ந்து நீயே சென்று அழைத்து வா என பாரதியின் தாய் சௌந்தர்யா கூற, பாரதியே கண்ணம்மாவை நேரில் அழைத்து வர செல்கிறார். இந்த நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில், பாரதி கண்ணம்மா வீட்டிற்கு சென்று, அவரை தன்னுடன் வருமாறு அழைக்கிறார். மேலும் ஹேமாவின் உடல்நிலை குறித்து பாரதி விவரிக்கிறார்.



பின்னர் இருவரும் காரில் புறப்படுகின்றனர். அதிக பதட்டத்துடன் இருக்கும் பாரதி வழியில் செல்லும் சைக்கிள் மீது இடிக்க நேர்கிறது. பிறகு, பாரதிக்கு கண்ணம்மா தண்ணீர் தரும் காட்சிகளும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளன. இந்த ட்விஸ்ட் ரசிகர்கள் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

PHOTOS: வெள்ளை நிற உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை நிதி அகர்வால் -போட்டோஸ்

அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கிடக்கும் நிலையில், இப்போது மேலும் ஒரு ட்விஸ்ட் வெளியாகியுள்ளது. அது தொடர்பாக வெளியான புகைப்படத்தில் பாரதி, கண்ணம்மா மற்றும் அவர்களின் இரு மகள்கள் என அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனை கண்ட ரசிகர்கள் இந்த நிகழ்வு எப்போது நடக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: