விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று ‘பாரதி கண்ணம்மா’. கண்ணமாவுக்கு தங்கையாக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கண்மணி மனோகரன்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்த கண்மணி, சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர்.
இவரை வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர் ஸ்வீட்டி.
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே பிற்காலத்தில் ஒரு ஈஸியான வேலையை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததாம் கண்மணிக்கு.
அப்போது அவரது மனதுக்குள் உதித்தது தான் நடிப்புத் துறை.
ஒரு நாள், ஆடிஷன் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பார்த்த அவர், தனது புகைப்படங்களையும் டிக்டாக் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார்.
அப்படித்தான் அவருக்கு ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதுவும் அந்த சீரியலில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடிப்போம் என, கனவில் கூட யோசிக்கவில்லையாம் கண்மணி.