• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Raja Rani 2: ராஜா ராணி 2 ஷூட்டிங் ஸ்பாட் - "அசிஸ்டன்ட் டைரக்டர் பரிதாபங்கள்" - வீடியோ இதோ!

Raja Rani 2: ராஜா ராணி 2 ஷூட்டிங் ஸ்பாட் - "அசிஸ்டன்ட் டைரக்டர் பரிதாபங்கள்" - வீடியோ இதோ!

ராஜா ராணி 2

ராஜா ராணி 2

ஒரு நல்ல ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேலை பார்க்க விரும்பும் ஹீரோயின் சந்தியா, எதிர்பாராதவிதமாக தனது அண்ணன் மூலம் ஹீரோ சரவணனுக்கு கல்யாணம் செய்து வைக்கப்படுகிறார்.

  • Share this:
ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் ராஜா ராணி 2 ரசிகர்களை கவர்ந்து வருகிறது. விஜய் டிவியில் பல சீரியல்கள் சீசன் 2-வாக ஒளிபரப்பாகி வந்தாலும் நடிகை ஆல்யா மானசா ஹீரோயினாக நடித்து வரும் ராஜா ராணி 2 சீரியல் சின்னத்திரை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் ஆல்யா மானசா சந்தியா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். ஹீரோவாக நடிகர் சித்து, சரவணன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இருவரும் கணவன் மனைவியாக நடித்து வருகின்றனர்.

ஒரு நல்ல ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேலை பார்க்க விரும்பும் ஹீரோயின் சந்தியா, எதிர்பாராதவிதமாக தனது அண்ணன் மூலம் ஹீரோ சரவணனுக்கு கல்யாணம் செய்து வைக்கப்படுகிறார். அதுவும் படிக்காத பெண் என்ற பொய்யோடு. ஒரு கட்டத்தில் சரவணனின் தாய் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு சந்தியா படித்த பெண் என்ற உண்மை தெரியும் போது அதனால் குடும்பத்தில் சிக்கல் ஏற்படுகிறது. ஆனால் நடக்கும் எல்லா பிரச்சனைகளின் போதும் சரவணன் தனது மனைவி சந்தியாவிற்கு துணையாக இருக்கிறார். இதனால் அடிக்கடி சரவணனுக்கும், அவனது தாய்க்கும் இடையே மனவருத்தம் ஏற்படுகிறது. தான் ஒரு நல்ல மருமகள் என்பதை நிரூபிக்க சந்தியா தொடர்ந்து போராடுகிறாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல சந்தர்ப்பங்களில் தான் ஒரு சிறந்த மருமகள் என்பதை நிலைநாட்டினாலும் கடைசியாக நகை திருட்டு பழி ஒன்று சந்தியா மீது சுமத்தப்பட்டது. சரவணனின் தம்பி மற்றும் தம்பி மனைவி அந்த நெக்லஸை எடுத்து வைத்து கொண்டு தன் மனைவி மீது பழி போடுவதை அறிந்த சரவணன், தகுந்த வீடியோ ஆதாரத்துடன் அதை குடும்பத்தினரிடம் நிரூபித்து மனைவியை காப்பாற்றுகிறார். இதனை தொடர்ந்து 3 மாத சவாலில் ஜெயித்து விட்டதாக கூறி சந்தியா தொடர்ந்து வீட்டிலேயே இருக்க சரவணன் தாய் சம்மதிக்க சந்தியா - சரவணன் இடையிலான உறவு மேலும் மென்மையாகிறது.

Also read... ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பெரிய நடிகர்கள் தீர்வுகாண முன்வர வேண்டும் - இயக்குநர் தங்கர் பச்சான்!

பாரதி கண்ணம்மா சீரியலை இயக்கி வரும் பிரவீன் பெனட் தான் இந்த ராஜா ராணி 2 சீரியலையும் இயக்கி வருகிறார். இதனிடையே சந்தியா - சரவணன் இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்றை தனது இன்ஸ்டாவில் அசிஸ்டன்ட் டைரக்டர் பரிதாபங்கள் என்ற பெயரில் ஷேர் செய்து உள்ளார் பிரவீன். இந்த வீடியோ கிளிப்பில் சித்து - ஆல்யா மானசா இருவரும் படுத்தபடி நடிக்கும் ரொமான்ஸ் காட்சி எப்படி வரவேண்டும் என்பதை விளக்கும் விதமாக, 2 அசிஸ்டன்ட் டைரக்டர்கள் படுத்து நடித்து காட்டி இருக்கிறார்கள்.



 




View this post on Instagram





 

A post shared by Praveen Bennett (@praveen.bennett)






அதை தொடர்ந்து சித்து கட்டிலுக்கு அருகே கீழே விழுவது போலவும், அவர் மீது ஆல்யா மானசா படுப்பது போலவுமான ரொமான்ஸ் காட்சிகள் அருமையான பாடல் வரிகளுடன் இடம்பெற்றுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: