• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bharathi Kannamma: திருமண கோலத்தில் ’கண்ணம்மா’ - என்ன விஷயமா இருக்கும்?

Bharathi Kannamma: திருமண கோலத்தில் ’கண்ணம்மா’ - என்ன விஷயமா இருக்கும்?

ரோஷினி ஹரிபிரியன்

ரோஷினி ஹரிபிரியன்

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினியின் திருமணகோலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’பாரதி கண்ணம்மா’ சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. மிகவும் பிரபலமான சீரியலாக இருக்கும் பாரதி கண்ணம்மாகவுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அண்மையில் வெளியான ஒட்டுமொத்த சீரியல்களுக்கான டி.ஆர்.பி ரேட்டிங்கில்கூட சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலான ’ரோஜா’ சீரியலை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது.

இந்த சீரியலில் ஹீரோயினாக ரோஷ்னி நடித்து வருகிறார். சீரியலில் அவரை ரசிக்கும் அதே ரசிகர் கூட்டம் ரோஷ்னியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் பின்தொடர்ந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ரோஷ்னி அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை அதில் பகிர்ந்து வருகிறார். அண்மையில் திருமண கோலத்தில் போட்டோ ஷூட்டிங்கை நடத்திய அவர், இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார். கியூட்டாகவும், செம்ம அழகாகவும் இருக்கும் ரோஷ்னியை ‘இவரா கண்ணம்மா? என நெட்டிசன்கள் வியந்துள்ளனர். அந்தளவுக்கு ரெட் கலர் புடவையில் சூப்பராக இருக்கிறார் கண்ணம்மா.



இதேபோல், பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? ஹேமா விஷயத்தில் பாரதி என்ன முடிவெடுக்கப்போகிறார்? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. உடல்நலம் குன்றியிருக்கும் ஹேமா தற்போது பாரதியின் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை பார்த்துக்கொள்வதற்கு கண்ணம்மா சரியானவர் என மருத்துவர் கூறிவிட்டார். அதில் விருப்பம் இல்லாத பாரதி, ஒருவழியாக தாய் சௌந்தர்யாவின் ஆலோசனைக்குப் பிறகு கண்ணம்மாவை சந்திக்க செல்கிறார்.



 




View this post on Instagram





 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)





வீட்டில் கண்ணம்மாவின் உடல் நலம் குறித்து எடுத்துக்கூறும் பாரதி, அவரை பார்த்துக்கொள்ள வீட்டிற்கு வருமாறு அழைக்கிறான். ஆனால், இதனை நிராகரிக்கும் கண்ணம்மா, ஹேமாவை தன் வீட்டிற்கு அழைத்து வருமாறு கூறுகிறாள். கண்ணம்மாவின் பதிலைக் கேட்டு கோபமடைந்த பாரதி, அதேவேகத்தில் வீட்டிற்கு திரும்பி அங்கு நடந்ததை விவரிக்கிறார். கண்ணம்மா இப்படி நடந்து கொண்டாளா? அவளுக்கு என்ன திமிர் என மாமியார் சௌந்தர்யாவும் தன் பங்கிற்கு திட்ட, அதனை பாரதியின் அப்பா தடுக்கிறார். மேலும், ஹேமாவை கண்ணம்மாவின் வீட்டிற்கே அழைத்துச் சென்று விடுவதில் என்ன தப்பு? எனவும் கேட்கிறார்.



அப்பா இப்படி கூறியதை கேட்டு ஆத்திரமடையும் பாரதி, தான் ஒருவர் மருத்துவர் என்பதால் நானே ஹேமாவை பார்த்துக்கொள்கிறேன் எனக் கூறுகிறார். மேலும், ஹேமா விஷயத்தில் ஒரு முடிவை எடுக்கப்போவதாகவும் கூறுகிறார். பாரதி என்ன முடிவெடுக்கப்போகிறார்? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பாரதி தன்னுடைய கோபத்தால் ரசிகர்களின் கோபத்தையும் சம்பாதித்து வருகிறார். ஹேமா, தனக்கும் - கண்ணம்மாவுக்கும் பிறந்த குழந்தை என்பதை எப்போது தெரிந்து கொள்ளப்போகிறானோ?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: