Bharathi Kannamma: பாரதியின் சர்ப்ரைஸிற்காக ஆவலுடன் காத்திருந்த வெண்பா.! ஆனால் நடந்ததோ..

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியை அடைய துடித்து பல வருடங்களாக கூடவே ஃப்ரண்டாக ஒட்டி கொண்டிருக்கும் வெண்பா, பாரதியின் சர்ப்ரைசிற்காக காத்திருந்து ஏமாற்றம் அடைந்தது இன்றைய எபிசோடில் காட்டப்பட்டுள்ளது.

  • Share this:
விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ரசிகர்களை ஈர்த்த பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கதாநாயகன் பாரதியை அடைய துடித்து பல வருடங்களாக கூடவே ஃப்ரண்டாக ஒட்டி கொண்டிருக்கும் வெண்பா, பாரதியின் சர்ப்ரைசிற்காக காத்திருந்து ஏமாற்றம் அடைந்தது இன்றைய எபிசோடில் காட்டப்பட்டுள்ளது. அது பற்றி பார்க்கலாம்.

முன்னதாக நேற்றைய எபிசோடின் முடிவில் பாரதியின் கிளினிக்கிற்கு தீக்காயம் பட்ட குழந்தையை அழைத்து வரும் தந்தை ஒருவர், அங்கிருக்கும் நர்ஸிடம் தன் பெண்ணிற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க சொல்கிறார். தீக்காயம் எப்படி பட்டது என்ற கேள்விக்கு, தன் முதல் மனைவியின் குழந்தையை இரண்டாவது மனைவி படுத்திய கொடுமையின் காரணமாக ஏற்பட்டது என்று அந்த தந்தை விளக்கம் அளிக்கிறார். அப்போது அங்கிருக்கும் வெண்பா அந்த தந்தையிடம் பேசுகையில், சூடு போடாம என்ன பண்ணுவாங்க.? உங்களை நம்பி வாழ வரும் ஒரு பெண் நீங்க வரிசையா கல்யாணம் பண்ணி பெத்து போட்ட குழந்தைகளுக்கு ஆயா வேலை பாக்க தானா வரா என கேள்வி எழுப்புகிறாள்.

வெண்பாவை பார்க்க அங்கே வந்து நடப்பதை பார்த்து ஓரமாக நின்று பாத்து கொண்டிருந்த பாரதி, வெண்பாவின் மனிதாபிமானமற்ற பேச்சால் அதிர்ந்து போகிறான். அப்படியே இன்றைய எபிசோட் தொடர்கிறது. வெண்பாவின் பேச்சை கேட்டு கடுப்பாகும் பாரதி நிகழ்விடத்திலிருந்து புறப்பட தயாராகிறான். தன்னை கல்யாணம் செய்து கொள்ளும் செய்தியை தான் பாரதி சொல்லி சர்ப்ரைஸ் செய்ய போகிறான் என்று ஆவலுடன் காத்திருக்கும் வெண்பா, பாரதி தன்னை சந்திக்காமல் கிளினிக்கை விட்டு செல்வதை பார்த்து நான் உனக்காக தான் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு வந்ததும், வராததும் கண்டுக்காம கிளம்புற என்கிறாள்.

AlsoRead : உயிருக்கு போராடறாங்களாம்..வதந்திக்கு பதிலடி கொடுத்த சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியெல்லா

உடனே சுதாரிக்கும் பாரதி கடுப்பை வெளி காட்டாமல் சாரி வெண்பா ஏதோ ஒரு நெனப்புல கிளம்பிட்டேன் வேற எதாவது விஷயம் இருக்கா என கேட்கிறான். அதற்கு வெண்பா நீதானே எதோ விஷயம் சொல்லணும்னு வர சொன்ன , இப்போ இப்படி கேக்குற என்கிறாள். ஆமாம் நான் தான் சொன்னேன், மறந்துட்டேன் என்கிறான். பின் உன்னிடம் முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என்று கூறியதும், வெண்பா வெட்கப்பட்டு கொண்டே சொல்லு பாரதி என்கிறாள். ஆனால் பாரதியோ ஹேமாவின் பர்த்டே பார்ட்டிக்கு மறக்காம வந்திடு என்று கூப்பிடுகிறான். இதனால் வெண்பா ஷாக் ஆகி இதைத்தான் என்னிடம் சொல்ல அவசரமா கூப்பிட்டியா என்கிறாள். ஆமாம், ஏன் நீ என்ன நெனச்ச என்று எதிர் கேள்வி எழுப்புகிறான் பாரதி. பின் பாரதி கிளம்பியவுடன், இவன் எதையோ மனசுல வைச்சு பேசுறான். என்னன்னு தெரியலையே என யோசித்து குழம்பி நிற்கிறாள் வெண்பா. கல்யாண செய்தியை சொல்லுவான் என ஆவலுடன் காத்திருந்த வெண்பா, பாரதியின் செயலால் ஏமாற்றமடைந்தது ரசிகர்களின் மனதை சந்தோஷப்படுத்தி உள்ளது.
Published by:Tamilmalar Natarajan
First published: