• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாரதி கண்ணம்மா சீரியல் படப்பிடிப்பில் இடைவேளை நேரத்தில் என்ன செய்வார்கள்? வைரலாகும் புகைப்படம்..

பாரதி கண்ணம்மா சீரியல் படப்பிடிப்பில் இடைவேளை நேரத்தில் என்ன செய்வார்கள்? வைரலாகும் புகைப்படம்..

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்வது எப்படி இருக்கும்? நடிகர்கள் இடைவேளை நேரத்தில் என்ன செய்வார்கள்? என்று ஆர்வம் உங்களுக்கு இருக்கிறதா.. அப்ப இதை படிங்க..

  • Share this:
தொலைக்காட்சி தொடர்களில், ஸ்டார் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா TRB ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. பாரதி கண்ணம்மா படபிடிப்பில், ஷூட்டிங் இடைவெளியில் நடிகர்கள் அட்டகாசம் செய்த புகைப்படம் சமீபத்தில் வெளியானது.

பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பல தரப்பினரும் ரசிகர்களாக உள்ளனர். பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்களுக்கும், சீரியலுக்கும் தனிப்பட்ட முறையில் ஃபேன் பேஜ் தொடங்கும் அளவுக்கு முன்னணியில் இருக்கும் சீரியல், ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காண்பதற்கே அழகாக உள்ளன.

படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்வது எப்படி இருக்கும்? நடிகர்கள் இடைவேளை நேரத்தில் என்ன செய்வார்கள்? இரண்டு காட்சிகள் படப்பிடிப்புக்கு இடையே உள்ள சிறிய இடைவேளையில் என்ன நடக்கும், நடிகர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் போன்ற கேள்விகள் உங்களுக்கு இருக்கிறதா? பாரதி கண்ணம்மாவின் ஷூட்டிங் நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த அழகான புகைப்படம் அதற்கான பதிலாக அமையும்.

பாரதி கண்ணம்மா தொடரின் பாரதி, பாரதியின் அம்மாவாக, கண்ணம்மாவின் மாமியாராக நடித்து வரும் ரூபஸ்ரீ, அவரின் இடண்டாவது மருமகள் கண்மணி மனோகரன், பாரதியின் அப்பாவாக ரிஷி மற்றும் பாரதி-கண்ணம்மா ஜோடியின் அழகான இரண்டு குழந்தைகள் ஆகியோர் ஒன்றாக சாப்பிடும், அன்பாக கொஞ்சி மகிழும் புகைப்படம் வெளியாகியுள்ளன. சீரியலில் எலியும் பூனையுமாக இருப்பவர்கள், கேமராவுக்குப் பின்னே, கொஞ்சிக் குலாவி மகிழ்வது அழகாக இருக்கிறது.

PhotoGallery: கவர்ச்சியான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்..

ஏகப்பட்ட பிரச்சனைகளை தனியாக எதிர்கொண்ட கண்ணம்மாவின் வாழ்வில் வசந்தம் வீசாதா என்ற ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களை திருப்தி படுத்தும் விதமாக கடந்த சில நாட்களாக காட்சியமைப்புகள் இருந்தன. தற்போதைய காட்சியமைப்புகள் ரசிகர்களை மிகவும் கவரும் வண்ணம் இடம் பெற்று வந்துள்ளன. சீரியல் உணர்ச்சிக் கலவையாக இருந்தாலும், படபிடிப்பு தளம் எப்போதும் கலகலவென்றே காணப்படுகிறது. அவ்வபோது, ஷூட்டிங் தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும். அப்படியொரு புகைப்படம் தற்போது மிகவும் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 



 




View this post on Instagram





 

A post shared by VijayTvFamily (@vijaytvfamilys)





வெளியிடப்படும் ஒவ்வொரு புரோமோவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளன.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: