• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஹேமாவிடம் தான் உன் சொந்த அம்மா என்று கண்ணம்மா சொல்ல போகிறாளா?

ஹேமாவிடம் தான் உன் சொந்த அம்மா என்று கண்ணம்மா சொல்ல போகிறாளா?

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

ஹேமாவை சொந்த மகள் என தெரிந்து கொண்ட கண்ணம்மா.. அடுத்து செய்யும் அதிரடி செயல்..

  • Share this:
விஜய் டிவி-யில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களின் ஆதரவிற்கு ஏற்ப மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் காட்டப்பட்டு வருகிறது. சீரியலில் பாரதியாக நடிகர் அருண் பிரசாத், கண்ணம்மாவாக நடிகை ரோஷினி ஹரிபிரியன் தாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். வெண்பா என்ற வில்லி கேரக்டரில் ஆங்கர் மற்றும் நடிகையுமான ஃபரீனா, கண்ணம்மாவின் மாமியார் கேரக்டரான சௌந்தர்யாவாக நடிகை ரூபா ஸ்ரீ ஆகியோர் நடித்து வருகின்றனர்.

தனக்கு பிறந்தது இரண்டு குழந்தைகள் என்பதை அறிந்து கொண்ட கண்ணம்மா, மற்றொரு குழந்தை எங்கே வளர்கிறது என்பதை தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்குகிறார். கண்ணம்மாவின் எமோஷ்னலை பாரதியை அடைய பயன்படுத்தி கொள்ள நினைக்கும் வெண்பா, உன்னுடைய இரண்டாவது குழந்தை என் கஸ்டடியில் தான் இருக்கிறது. இரண்டாவது குழந்தை வேண்டுமென்றால் நீ பாரதியை டைவர்ஸ் செய்வதற்கான பேப்பரில் கையெழுத்து போட்டு கொடு என்று நிர்பந்திக்கிறாள். இதனால் கடும் குழப்பத்தில் தவிக்கிறாள் கண்ணம்மா.

இறுதியாக குழந்தை தான் வேண்டும் என்ற முடிவோடு 8 வருடங்களுக்கும் மேலாக பிரிந்திருக்கும் பாரதியை, விவாகரத்து செய்வதற்கான பேப்பரில் கையெழுத்து போட தயாராகிறாள். சரியாக அந்த சமயத்தில் வீட்டினுள் வரும் மாமியாரிடம் அந்த பேப்பரை மறைக்க பார்த்து மாட்டி கொள்கிறாள். தொடர்ந்து மாமியாரிடம் தன் 2-வது குழந்தை கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக கூறி அழுகிறாள் கண்ணம்மா. ஒருகட்டத்தில் உண்மையை மறைக்க முடியாமல் தங்களிடம் வளரும் ஹேமா தான், கண்ணம்மாவின் 2-வது குழந்தை என்ற நீண்ட வருட ரகசியத்தை உடைக்கிறார் மாமியார் சௌந்தர்யா.

also read : குடும்பமே நடிகர்களா ? வைரலாகும் பாரதி கண்ணம்மா லட்சுமியின் ஒரிஜினல் குடும்பம்..


also read : பாக்கியாவை வெளியே தள்ளும் கோபி.. எழில் கொடுத்த அதிர்ச்சி.. பாக்கியலட்சுமியில் அதிரடி டிவிஸ்ட்..

இதை நம்ப முடியாமல் நீங்கள் சொல்வது உண்மை தானா? என்று அதிர்ச்சியுடன் கேட்கும் கண்ணம்மாவிற்கு, ஹேமா நீ பெற்றெடுத்த பெண் தான் என்று கையில் சத்தியம் அடித்து சொல்கிறார் சௌந்தர்யா. இதனை அடுத்து இந்த உண்மையை நம்பும் கண்ணம்மா கேட்கும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்லும் அவர், குழந்தைகள் மூலமாக என்றைக்காவது பாரதியும் நீயும் சேர்வீர்கள் என்ற எண்ணத்தில் தான் இப்படி செய்ததாக ஆறுதல் தெரிவிக்கிறார். பின்னர் வெண்பாவின் சதிவேலைகள் பற்றி கூறும் கண்ணம்மாவிடம், நம் குடும்பத்திலேயே சூழ்ச்சி செய்யும் அவளை என்ன செய்ய போகிறேன் பார் என்று கூறிவிட்டு செல்கிறார்.

அத்துடன் இன்றைய எபிசோட் முடிந்த நிலையில், லேட்டஸ்ட் ப்ராமோவில் தன் மாமியார் வெண்பாவை சுட்டு கொல்வது போல கண்ணம்மா கனவு காண்பதாக காட்டப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடையும் கண்ணம்மா, கணவன் வீட்டிற்கு சென்று ஹேமாவை கொஞ்சி மகிழ்ந்து தான் யார் என்பதை அவளிடம் தெரிவிக்க எத்தனிப்பது போல காட்டப்படுகிறது. ஹேமாவிடம் தான் சமையலம்மா இல்லை உன் சொந்த அம்மா என்று கண்ணம்மா சொல்ல போகிறாளா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: