பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து விலக இது தான் காரணம் - கணவருடன் சேர்ந்து உண்மையை உடைத்த ஜெனிபர்

ஜெனிபர்

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த ஜெனிபர் சீரியலில் இருந்து விலகியதற்கு வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.அந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  விஜய் டிவியில் ப்ரைம் டைமிங் ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த முக்கியமான சீரியலாக இருந்து வருகிறது. இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நடிகை சுசித்ரா ஷெட்டி, பாக்கியலட்சுமியாக நடித்து வருகிறார்.

  மேலும் அந்த சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்து வந்தார்.இவர் சன் டிவியில் ஒளிப்பரப்பான லட்சுமி ஸ்டோர்ஸ், கலர்ஸ் தமிழில் அம்மன் ஆகிய சீரியல்களில் நடித்து இருக்கிறார். தற்போது  சில காரணங்களுக்காக சீரியலை விட்டு விலகி விட்டதாக கூறினார். பின்பு அவரின் ரசிகர்கள் தொடர்ந்து விலகியதற்கான காரணம் கேட்டு வந்தனர்.இதற்காக தற்போது புதிதாக Mr and Mrs Love என்ற யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, அதில் முதல் வீடியோவாக விலகியதற்கான காரணத்தை கூறி பதிவிட்டுள்ளார்.

  அந்த வீடியோவில் ஜெனிபர் சீரியலில் இருந்து விலகுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது என்று கூறியுள்ளனர்.ஒன்று பெர்சனல் காரணம் என்றும், அதை கூடிய சீக்கிரம் கூறுவோம் என்று தெரிவித்துள்ளனர்.மற்றொரு காரணம் என்னவென்றால், இதுவரை ஜெனிபர் நடித்து வந்த கதாபாத்திரத்தில் கேரெக்டர் மாறபோவதாகவும், அதில் உடன் பாடில்லை என்றும் கூறியுள்ளனர்.

  Also read: ’நெகடிவ்’ கமெண்ட் கொடுத்த ரசிகர்களை Block செய்த சீரியல் நடிகை!

  அதற்கு உதாரணமாக அதே சீரியலில் நடிக்கும் கோபி கேரக்டருக்கு வரும் நெகடிவ் கமெண்ட்ஸை அவர் எப்படி கையாள்கிறார் என்பதையும்,அதற்காக அவர் வீடியோ போட்டு இது வெறும் சீரியல் தான் என்று விளக்கமளிப்பதையும் பார்த்துள்ளோம்.அதனால் இனிமேல் வேறுமாதிரி மாறப்போகும் ராதிகா கதாபாத்திரத்தில் நடிப்பத்தில் தயக்கமாக இருந்தது என்றுக் கூறி சீரியலிலிருந்து விலகியதற்கு விளக்கமளித்துள்ளனர்.  மேலும் அந்த வீடியோவில்’இவ்ளோ நாள் என்ன சப்போர்ட் பண்ண எல்லாருக்கும் நன்றி.நான் திரும்பியும் கம் பேக் கொடுப்பேன் என்று ஜெனிபர் கூறியுள்ளார்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: