ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

புற்றுநோயிலிருந்து குணமடைந்த பிரபல நடிகை மீண்டும் உயிருக்கும் போராடும் சோகம்

புற்றுநோயிலிருந்து குணமடைந்த பிரபல நடிகை மீண்டும் உயிருக்கும் போராடும் சோகம்

நடிகை ஐந்த்ரிலா சர்மா

நடிகை ஐந்த்ரிலா சர்மா

Bengali actress Aindrila Sharma | 'ஜுமுர்' என்ற நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானா ஐந்த்ரிலாவுக்கு ஜோடியாக நடித்த சப்யசாச்சி சௌத்ரியை இவர் காதலிப்பதாக தகவல்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • West Bengal, India

இரண்டு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் மீண்டும் பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பல வங்காள திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்த நடிகை ஐந்த்ரிலா சர்மா ஏற்கனவே இரண்டு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்ததையெடுத்து சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்நிலையில் சமீபத்தில்  பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஹவுராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அங்கு அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மருத்துவர்களின் அறிக்கையில் அவரது மூளையில் பல கட்டிகள் இருப்பதாகவும் இதனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது கோமாவில் உள்ள அவரை தொடர்ந்து வென்டிலேட்டரில் வைத்து கண்காணித்து வருகின்றனர் மருத்துவர்கள்.

ஐந்த்ரிலா முன்பு முக்கியமான அறுவை சிகிச்சையும், புற்றுநோய்க்காக பல கீமோதெரபி சேஷன்களையும் மேற்கொண்டார். அதன் பிறகு அவர் புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமாகிவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, ஐந்த்ரிலா மீண்டும் தனது படப்பிடிப்பைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது மீண்டும் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்த்ரிலா விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read : வீடா? அரண்மனையா? ரூ. 65 கோடிக்கு வீடு வாங்கிய ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி!

ஐந்த்ரிலா ஷர்மா சமீபத்தில் ஜீ பங்களா சினிமாவின் ஒரிஜினல் படமான 'போலே பாபா பர் கரேகா'வில் அனிர்பன் சக்ரவர்த்தியின் மகளாக நடித்திருந்தார். மேலும், அவர் பல OTT ப்ரோஜெக்ட்களிலும் நடித்துள்ளார். 'ஜிபோன் ஜோதி' மற்றும் 'ஜியோன் கதி' ஆகிய படங்களில் முன்னணி நடிகையாகவும் நடித்துள்ளார்.

'ஜுமுர்' என்ற நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானா ஐந்த்ரிலாவுக்கு ஜோடியாக நடித்த சப்யசாச்சி சௌத்ரியை இவர் காதலிப்பதாக தகவல்.

Published by:Selvi M
First published:

Tags: Actress, Tamil News