முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தீபாவளிக்கு முன்பே வெளியாகிறதா சர்கார்?- ரிலீஸ் தேதியில் திடீர் குழப்பம்

தீபாவளிக்கு முன்பே வெளியாகிறதா சர்கார்?- ரிலீஸ் தேதியில் திடீர் குழப்பம்

சர்கார் பட போஸ்டர்

சர்கார் பட போஸ்டர்

சர்கார் படத்தை தீபாவளிக்கு முன்னதாகவே வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.be

  • Last Updated :

சர்கார் படத்தை தீபாவளிக்கு முன்னதாகவே வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி,பழ.கருப்பையா, யோகிபாபு, ராதாரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சுந்தர் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர அறிவித்துள்ளனர். ஆனால் படத்தை நான்கு நாட்களுக்கு முன்னதாக அதாவது நவம்பர் 2 அன்று வெளியிட வேண்டும் என்று புதிதாகக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. மெர்ஷல் படத்தை விட அதிக விலைக்கு சர்கார் படத்தின் வியாபாரம் நடந்துள்ளதால் அதிக விடுமுறை நாட்கள் இருந்தால் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற முடியும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கருதுகிறார்கள். மேலும் நவம்பர் 2 அன்று வெளியானால் செவ்வாய் முதல் ஞாயிறு வரை நல்ல வசூலைப் பெற முடியும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதுகுறித்து சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் , "நவம்பர் 2-ம் தேதி படம் வெளியாவது சரியான முடிவு. ஆனால் நமக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. செங்கல்பட்டு வியாபாரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. முன் பதிவுகள் தொடங்க வேண்டியுள்ளன “ என்று கூறியுள்ளார்.

இந்தக் கருத்துக்கு, அனைத்து வருடங்களுக்குமான அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் வாரத்தின் முதல் வாரம் ஆரம்பமாகின்றன. இறுதி வருட மாணவர்களுக்கு நவம்பர் 2-ம் தேதி ஆரம்பமாகிறது. எனவே நவம்பர் 6 அன்று சர்கார் வெளியாவது தான் சரியாக இருக்கும் என்ற பதிலும் கூறப்பட்டுள்ளது.

புதிதாக எழுந்திருக்கும் இந்தக் கோரிக்கையை சன் பிக்சர்ஸ் ஏற்குமா? நிராகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

First published:

Tags: A.R., A.R.murugadoss, Sarkar, Sarkar Release, Vijay